Home » IWS Logistics நிறுவனத்தின் செயல்திறன் மேம்பாட்டுக்காக DIMO வழங்கிய KALMAR DCU80

IWS Logistics நிறுவனத்தின் செயல்திறன் மேம்பாட்டுக்காக DIMO வழங்கிய KALMAR DCU80

by Ceylon Business
June 1, 2025 10:01 am/**/ 0 comment

இலங்கையில் KALMAR உபகரணங்களுக்கான உத்தியோகபூர்வ பிரதிநிதியாக செயற்பட்டு வரும் DIMO நிறுவனம், நாட்டின் முன்னணி தனியார் கொள்கலன் சேமிப்பு நடவடிக்கை நிறுவனமான IWS Logistics (Private) Limited நிறுவனத்திற்கு புதிய அதிநவீன KALMAR DCU80 Empty Container Handler (ECH) வாகனத்தை அண்மையில் வழங்கியுள்ளது.

KALMAR DCU80 என்பது 8 தொன் எடையை தூக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வெற்று கொள்கலன்களை திறமையாக கையாள்வதற்காக வடிவமைக்கப்பட்டிருப்பதோடு, செயற்பாட்டுத் திறனை அதிகரிக்க உதவுகிறது. அத்துடன், இது சிறப்பான இட முகாமைத்துவத்திற்கு உதவுவதுடன், உச்சபட்ச களஞ்சியத் திறனை பேணுவதற்கு உதவுகிறது. இது General Purpose (GP) கொள்கலன்கள் 6 இன் உயரம் வரை எளிதாக கையாளக்கூடியது.

வழக்கமான வெற்று கொள்கலன் கையாளும் வாகனங்களுடன் (empty container handler) ஒப்பிடும்போது, KALMAR DCU80 இல் உள்ள Smart Hydraulics மற்றும் Load Sensing Technology ஆகியன, தேவையான நேரத்தில் மட்டுமே ஹைட்ரோலிக் சக்தியை வழங்குவதன் மூலம் எரிபொருள் செலவையும் பராமரிப்புச் செலவையும் குறைக்கின்றன. இதன் மூலம் களஞ்சியத்தின் காபன் வெளியீட்டை கணிசமாக குறைப்பதற்கு இது உதவுகிறது. எனவே பொருளாதார ரீதியாகவும், சுற்றுச்சூழல் ரீதியாகவும் இது சிறந்த தெரிவாக அமைகிறது.

banner

24/7 செயற்பாட்டுத் திறனைக் கொண்ட இது, சிரமமான மற்றும் சவாலான காலநிலை சூழல்களுக்கு ஈடுகொடுக்கக் கூடிய, நம்பிக்கையுடன் பயன்படுத்தக் கூடியதாகும். அத்துடன் இயக்குபவரை மையமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளதால், சிறந்த செயற்பாட்டுத் திறன் மற்றும் சிறந்த பயன்படுத்தும் அனுபவத்தை வழங்குகிறது.

இது தொடர்பாக IWS Holdings Pvt Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் திமித்ரி ஷெரிஃப் கருத்து வெளியிடுகையில், “IWS நிறுவனம் பல தசாப்தங்களாக KALMAR வர்த்தகநாமத்தின் மீது அதீத நம்பிக்கை கொண்டுள்ளது. KALMAR இன் உத்தியோகபூர்வ விநியோகஸ்தராகவும், சர்வதேச தரம் வாய்ந்த தீர்வுகளை வழங்கும், விற்பனைக்குப் பிந்தைய சிறந்த சேவையுடனும், பொறியியல் நிபுணத்துவத்துடனும் திகழும் முன்னணி நிறுவனமுமான DIMO நிறுவனத்துடன் கூட்டுச் சேர்ந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தமை மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது. KALMAR DCU80 Empty Container Handler மூலம் எமது களஞ்சிய நடவடிக்கைகளை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களுக்கு மேம்பட்ட சேவையை வழங்க முடியும் என நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

இது பற்றி DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சமிந்த ரணவன தெரிவிக்கையில், “இன்றைய காலகட்டத்தில், சூழலுக்கு ஏற்ற செயன்முறைகள் ஊடாக செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக, பல்வேறு கொள்கலன் செயற்பாட்டாளர்கள் அதிக ஆர்வம் காட்டுகிறார்கள். KALMAR DCU80 ஆனது, நிலைபேறான தன்மையை கருத்தில் கொண்டு KALMAR நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட சிறந்த உபகரணத்திற்கு ஒரு உதாரணம் என கூறலாம். பழைய மாதிரிகள் மற்றும் ஏனைய தயாரிப்புகளுடன் ஒப்பிடும்போது, இதில் உள்ள மேம்பட்ட ஹைட்ரோலிக் தொகுதி மற்றும் வலுசக்தி சேமிப்பு வழிமுறைகள் காரணமாக, இதன் எரிபொருள் நுகர்வு கணிசமாக குறைக்கப்பட்டுள்ளது என்பதை எம்மால் அவதானிக்க முடிகிறது. இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் லொஜிஸ்டிக்ஸ் துறையில் செயற்பாட்டுத் திறனையும், நிலைபேறான தன்மையையும் மேம்படுத்தும் நவீன தீர்வுகளை வழங்கும் வாய்ப்பு கிடைத்ததில் DIMO நிறுவனம் மிகுந்த நெகிழ்ச்சியுடன் மகிழ்ச்சியடைகிறது.” என்றார்.

இலங்கையின் லொஜிஸ்டிக்ஸ் துறையில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும், பசுமையான எதிர்காலத்தைக் கட்டியெழுப்பவும் DIMO நிறுவனம், KALMAR போன்ற உலகத் தரம் வாய்ந்த வர்த்தகநாமங்களுடன் ஏற்படுத்தியுள்ள இவ்வாறான ஒத்துழைப்புகள் மூலம் அதன் அர்ப்பணிப்பு வெளிப்படுத்தப்படுகின்றது. உலகத் தரம் வாய்ந்த தொழில்நுட்பங்களை இலங்கைக்கு கொண்டு வந்து, நாட்டின் தொழிற்துறையின் முன்னேற்றத்திற்கு DIMO தொடர்ச்சியாக தனது பங்களிப்பை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

About Us

Ceylon Business is your trusted hub for news, insights, and opportunities in Sri Lanka’s vibrant business landscape. From emerging startups to established enterprises, we bring you the latest updates, market trends, and inspiring success stories that shape the future of Sri Lankan commerce.

Categories

Fevicon-White in Blue-1

All rights reserved 2025