Home » SLIM – NSA 2025 விருது விழாவில் பிரகாசித்த விற்பனைத் தூதுவர்கள்

SLIM – NSA 2025 விருது விழாவில் பிரகாசித்த விற்பனைத் தூதுவர்கள்

by Ceylon Business
June 13, 2025 3:23 pm/**/ 0 comment

1970ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனமான Sri Lanka Institute of Marketing (SLIM), நாட்டின் உத்தியோகபூர்வ சந்தைப்படுத்தல் அமைப்பாக விளங்குகிறது.

SLIM நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள 2025 தேசிய விற்பனை விருதுகள் விழா (NSA 2025), இலங்கை சந்தைப்படுத்தல் சமூகத்தின் அர்ப்பணிப்பு மற்றும் உன்னத தொழில்முறை நெறிகளை கௌரவிக்கும் நோக்கத்துடன் நடைபெறவுள்ளது. “விற்பனைத் தூதுவர்கள்: இலக்கங்களுக்கு பின்னாலுள்ள ஒரு சக்தி” எனும் எண்ணக்கருவை மையமாகக் கொண்டு நடைபெறும் இந்த கௌரவமிக்க விருது விழா, வணிக முயற்சிகளின் வெற்றிக்கு பின்னால் உள்ள இயக்க சக்தியை வெளிச்சத்திற்கு கொண்டு வரும் வகையிலான ஒரு நிகழ்வாக ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் (SLIM) தலைவரான பேராசிரியர் கலாநிதி தேவசிறி என். ஜயந்த இது தொடர்பில் தெரிவிக்கையில், “உண்மையான விற்பனை விசேடத்துவமானது, இலக்குகளை எட்டுவதை மட்டும் கொண்டதல்ல. அது வாடிக்கையாளர்களுக்கு அர்த்தமுள்ள பெறுமதியை உருவாக்குவதையும், அவர்களின் உள்நோக்கங்களை புரிந்துகொள்வதையும், நெறிமுறை மிக்க வணிக நடைமுறைகளை பின்பற்றுவதையும், நீடித்த கூட்டு ஒத்துழைப்புகளை வளர்ப்பதையும் உள்ளடக்கியதாகும். தேசிய விற்பனை விருதுகள் (NSA) எமது விற்பனைத் துறையினருக்கு தங்களை உறுதியான தலைவர்களாக மேம்படுத்தும் சிறப்பான மேடையாக அமைந்துள்ளது. இத்தகைய தலைவர்களால் திடமான மற்றும் நிலைபேறான வணிக வளர்ச்சியை முன்னெடுக்க முடியும்.” என்றார்.

இந்த வருடத்திற்கான தேசிய விற்பனை விருது விழா (NSA) மிக முக்கியமான நோக்குடன் நடத்தப்படுகின்றது. விற்பனைத் துறையில் பணியாற்றும் நபர்களின் மதிப்பையும், நிலையையும் மேலும் உயர்த்துவதே அதன் நோக்கமாகும். இவர்களின் பங்களிப்பு வெறுமனே ஒரு செயற்பாட்டுக்கு மட்டுப்படுத்தப்பட்ட ஒன்றல்ல; வளர்ந்து வரும் இலக்குகளுக்குப் பின்னே உள்ள வலிமையான மற்றும் நிலையான இயக்க சக்தியாகவும், வணிகத்திற்கு மதிப்பை உருவாக்கும் தலைவர்களாகவும் இவர்களை மதிக்க வேண்டும் என்பதே இவ்விருது விழாவின் உண்மையான நோக்கமாகும். 

banner

SLIM நிறுவனத்தின், நிகழ்வுகள் பிரிவு பிரதித் தலைவர் இனோக் பெரேரா இது குறித்து தெரிவிக்கையில், “NSA 2025 இலங்கையின் முழுமையான வணிக வெற்றிக்கு மூல காரணியாக உள்ள விற்பனைத் தொழில்முனைவோர்களை விருது வழங்கி அங்கீகரிக்கிறது. இந்த ஆண்டில் விருது வகைகள் மேலும் விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், பல்துறை பங்கேற்புகளுக்கான வாய்ப்புகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. திறமையான நபர்களை அங்கீகரிப்பது அவர்களின் தொழில்முனைவு வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதே சமயம், தொழில் தரநிலைகளையும் உருவாக்கிறது. இவ்விருதுக்கான தேசிய அங்கீகார திட்டத்தில், தங்களின் மிகச்சிறந்த செயற்பாட்டாளர்களை முன்மொழியுமாறு நாங்கள் நிறுவனங்களிடம் கேட்டுக் கொள்கின்றோம்,” என்றார்.

இலங்கை சந்தைப்படுத்தல் நிறுவனத்தின் கல்வி மற்றும் ஆராய்ச்சி பிரதித் தலைவரான டாக்டர் தில்ஹான் சம்பத் ஜயதிலக இது பற்றி கருத்து வெளியிடுகையில், “தேசிய விற்பனை விருதுகள் (NSA) என்பது இலங்கையின் விற்பனைத் துறையை அங்கீகரித்து கௌரவிக்கும் மிக முக்கியமான மேடையாகத் திகழ்கிறது. இது புத்திசாலித்தனமான பணிக்கான வெகுமதியாக மட்டும் பார்க்கப்படவில்லை. நேர்த்தியான பணி நெறிகளை கையாளும் விற்பனை நிபுணர்களை வலிமையான தலைவர்களாக மாற்றும் ஒரு பயணமாகவும் உள்ளது. NSA ஊடாக, திறமைகளை வளர்த்தல், செயல்திறனை உயர்த்தல், உண்மையான விற்பனைத் தூண்களாக இருப்பவர்களை கௌரவித்தல் ஆகியவற்றை SLIM தொடர்கிறது. இந்த அங்கீகாரப் பயணத்தில் மேலும் பல சிறந்த நபர்கள் இணைவதற்காக வரவேற்பதில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.

NSA 2025 நிகழ்விற்கான நடுவர்கள் குழுவில், தொழில்துறையில் உள்ள முக்கிய பிரபலங்கள் இடம்பெற்றுள்ளனர். இருபதுக்கும் மேற்பட்ட ஆண்டுகளாக இந்த விருது விழா நடத்தப்பட்டு வருவதால், ஒரு தெளிவான மற்றும் வெளிப்படையான மதிப்பீட்டு அம்சங்கள் மூலம் தெரிவுகள் நடைபெறுகின்றன. இவ்வகையான ஒரு நீண்ட கால பாரம்பரியத்துடன் கூடிய NSA விருது விழாவானது, விற்பனை நிபுணர்களின் தொழில்முறை வளர்ச்சியிலும், தொழில்துறையின் மொத்த நம்பிக்கையிலும் சிறந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

தேசிய விற்பனை விருதுகள் 2025 திட்டத் தலைவர் சன்ன ஜயசிங்க கூறுகையில், “எந்தவொரு வணிகத்தினதும் உண்மையான தூதுவர்களாக விற்பனை குழுவினர் உள்ளனர்; வளர்ச்சியை ஊக்குவித்து, சவால்களை நேருக்கு நேர் எதிர்கொண்டு, சந்தை உறுதியற்ற காலங்களிலும் சிறந்த வெளியீடுகளை வழங்குகின்றனர். இன்றைய மாறிவரும் சந்தையில், இவ்வாறான நபர்களை தொழில்முறையாக அங்கீகரிப்பதும், அவர்களை மேலும் சக்திமிக்கவர்களாக மாற்றுவதும் மிகவும் அவசியமாக உள்ளது. SLIM National Sales Awards 2025 விழாவானது, இந்த நிபுணர்களை உண்மையான ‘விற்பனை தூதுவர்கள்’ என அழைப்பதோடு, ‘இலக்கங்களின் பின்னணியில் உள்ள சக்தி’ எனக் கௌரவிக்கும் சக்திவாய்ந்த ஒரு மேடையை வழங்குகிறது,” என்றார்.

SLIM பிரதம நிறைவேற்று அதிகாரி (CEO) சமில் விக்ரமசிங்க தெரிவிக்கையில், “SLIM இல், விற்பனை நிபுணர்கள் வெறும் வணிக பங்களிப்பாளர்கள் அல்ல; அவர்கள் வளர்ச்சி, மாற்றம் மற்றும் தடையில்லா செயற்பாடுகளுக்கான தூண்டுதலை ஏற்படுத்துபவர்களாக விள்ங்குகிறார்கள் என நாம் நம்புகிறோம். NSA 2025 என்பது ஒரு விருது விழாவுக்கு அப்பாற்பட்டதாகும். புத்தாக்கத்தை முன்னெடுத்து, வாடிக்கையாளர்களுடன் நம்பிக்கை ஏற்படுத்தி, மாறும் சந்தைகளில் தொடர்ச்சியான சிறந்த பெறுபேறுகளை வழங்கும் நபர்களுக்கான தேசிய ரீதியான மரியாதையாகும். இந்த மேடையின் மூலம், விற்பனை தொழில்முறையாளர்களின் மரியாதையை வலுப்படுத்தி, நம்பிக்கை, நோக்கம் மிக்க மற்றும் விசேடத்துவத்துடன் முன்னிலை வகிக்கும் தனிநபர்களை ஊக்குவிப்பதே எமது நோக்கமாகும்” என்றார்.

SLIM NASCO அனில் குமார மீகஹகே தெரிவிக்கையில், “SLIM NASCO என்பது இலங்கையின் முன்னணி விற்பனைத் துறைக்கு மரியாதை வழங்கும் தளம் ஆகும். நிறுவன வெற்றிக்குக் காரணமாக உள்ள விற்பனை நிபுணர்கள், திறமையான போட்டிக்கு தொடர்ச்சியான மேம்பாட்டுக்கு அவசியமானவர்களாவர். NASCO அற்புதமான சாதனைகளை கௌரவித்து, தொழில்முறை விசேடத்துவத்தை வெளிப்படுத்துகிறது. ஆண்களுடன் இணைந்து பெண்களின் பங்கேற்பும் அதிகரித்து வருவதானது, எமது தொழில்துறையின் சமூகமயமான முன்னேற்ற வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது” என்றார். 

NSA 2025 விருது விழாவானது, விற்பனைத் துறையில் மிக உயர்ந்த அங்கீகாரம் என்பதோடு, உண்மையான தொழில்முறை நிபுணர்களை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையிலான அங்கீகாரத்தை அளிக்கிறது. இது வணிக வளர்ச்சியை வணிகத்திலும் தேசிய அளவிலும் ஒரு பரிவர்த்தனை முன்னேற்றமாக கருதாமல், வணிக படையணியை மூலோபாய ரீதியாக மாற்றும் விளைவை நோக்கிச் செலுத்துவதில் ஒரு மூலோபாய மற்றும் கௌரவமான தொழிலாகும்.

மேலதிக தகவல்களுக்கு, https://slim.lk எனும் இணையதளத்தை பார்வையிடுங்கள் அல்லது கங்கனி 070 326 6988 அல்லது அவிஷ்கா 071 841 7591 ஆகியோரை தொடர்பு கொள்ளுங்கள்.

You may also like

Leave a Comment

About Us

Ceylon Business is your trusted hub for news, insights, and opportunities in Sri Lanka’s vibrant business landscape. From emerging startups to established enterprises, we bring you the latest updates, market trends, and inspiring success stories that shape the future of Sri Lankan commerce.

Categories

Fevicon-White in Blue-1

All rights reserved 2025