Home » இலங்கையின் முன்னணி உணவு தொழிற்துறை கண்காட்சியில் புத்தாக்க கண்டுபிடிப்புகளை கொண்டுவரும் Knowledge Hub

இலங்கையின் முன்னணி உணவு தொழிற்துறை கண்காட்சியில் புத்தாக்க கண்டுபிடிப்புகளை கொண்டுவரும் Knowledge Hub

by CeylonBusiness1
August 17, 2025 12:33 pm/**/ 0 comment

இலங்கையின் உணவுத் தொழில்துறை வருடாந்த அட்டவணையில் மிகவும் எதிர்பார்க்கப்படும் ஒரு நிகழ்வே Profood Propack & Agbiz 2025 ஆகும். Sri Lanka Food Processors Association (SLFPA – இலங்கை உணவு பதப்படுத்துனர்கள் சங்கம்) மற்றும் Lanka Exhibition and Conference Services (LECS – இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு சேவைகள்) அமைப்பு ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வு, 2025 ஓகஸ்ட் 22 – 24 வரை கொழும்பு BMICH இல் இடம்பெற உள்ளது. 

கைத்தொழில் அமைச்சு, தேசிய விவசாய வணிக சபை மற்றும் இலங்கை உணவு விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (IFSTSL) ஆகியன இக்கண்காட்சிக்கு ஆதரவளிக்கின்றன.

கடந்த 25 ஆண்டுகளாக, SLFPA இன் முன்னணி தளமாக Profood Propack & Agbiz விளங்குவதன் காரணமாக, இலங்கையின் உணவுத் துறையை முன்னேற்றகரமான பாதைக்கு இட்டுச் செல்ல வழிவகுப்பதன் மூலம், பொருளாதார வளர்ச்சிக்கு பங்களித்து வருகிறது. இது விவசாயம், உணவுப் பதப்படுத்தல், பொதியிடல் மற்றும் அது தொடர்பானை துறைகளில் சேவைகளை முன்னெடுக்கும் முன்னணி நிறுவனங்களை ஒன்றிணைத்து, அறிவுப் பகிர்வு, புத்தாக்க கண்டுபிடிப்பு, மூலதன கூட்டாண்மைகளை ஏற்படுத்த ஊக்குவிக்கிறது.

banner

இவ்வருட கண்காட்சியில், கடந்த வருடம் அறிமுகப்படுத்தப்பட்ட Knowledge Hub (அறிவு மையம்) மேலும் விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய தொழில்முயற்சியாளர்கள் வாய்ப்புகளை அடையாளம் காணும் வகையில் உதவி மற்றும் வழிகாட்டல்களை வழங்குவதற்கு ஏற்ற வகையில் கட்டமைக்கப்பட்ட, நுகர்வோர் உதவிப் பிரிவும் (Consumer Assistance Desk) உள்ளடக்கப்பட்டுள்ளது.

இது குறித்து SLFPA தலைவர் துசித் விஜேசிங்க தெரிவிக்கையில், “முதன்மையான உணவுப் பதப்படுத்தல் தீர்வுகளை வழங்குவதில் நாம் ஆர்வமாக உள்ளோம். மிகச் சிறந்த நுழைவுகளுக்கு விருதுகள் மற்றும் கௌரவங்களை வழங்கவுள்ளோம். இதில் ஒரு சில விடயங்கள் SLFPA ஆதரவுடன் ஏற்கனவே வணிகமயமாக்கலுக்கு உட்படுத்துவதற்கான நடவடிக்கையில் உள்ளன. இது இத்துறை தொடர்பான முக்கிய முன்னேற்றத்தை குறிக்கிறது. இந்த முயற்சியை மேலும் வலுப்படுத்த, எமது செயற்குழுவினால் Knowledge Hub இல் சிறப்பாக கட்டமைக்கப்பட்ட தொழில்துறை உதவிப் பிரிவும் (Industry Help Desk) அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது புதிய தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வணிக பங்கேற்பாளர்களுக்கு வழிகாட்டல் மற்றும் ஆதரவுக்கான முக்கிய தளமாக செயற்படும்.” என்றார்.

இது குறித்து, Profood Propack 2025 நிகழ்வின் ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் அருண சேனாநாயக்க கருத்து வெளியிடுகையில், “இருபது ஆண்டுகளுக்கும் மேலாக, Profood Propack & Agbiz ஆனது இலங்கையின் உணவுத் தொழில்துறையில் முன்னணியில் இருந்து வருகிறது. இது நிறுவனங்கள், புத்தாக்க கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் முதலீட்டார்களை ஒரே கூரையின் கீழ் கொண்டு வருகிறது. இதன் 2025 பதிப்பானது இந்நிகழ்வின் பாரம்பரியத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கவுள்ளதோடு, புதிய வர்த்தக பாதைகளை உருவாக்கி, புதிய வணிகப் பிரிவுகளையும் உலகத் தரத்திலான உணவுப் பதப்படுத்தல் செயலாக்கங்கள், பொதியிடல் மற்றும் விவசாய வணிகத் தீர்வுகளையும் காட்சிப்படுத்தவுள்ளது. புதிய யோசனைகள் வாய்ப்புகளாக மாறவும், வாய்ப்புகள் வளர்ச்சியாக மாறவும் ஒரு தளத்தை வழங்குவதில் நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.

சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சியாளர்கள் (SMEs) தங்கள் தயாரிப்புகளை காட்சிப்படுத்தவும், மூலதன உறவுகளை உருவாக்கவும், புதிய சந்தைகளில் நுழைந்து கூட்டாண்மைகளை ஆராய்வதனை வலுவூட்டுவதும் இந்நிகழ்வின் முக்கிய நோக்கமாகும். தேசிய வளர்ச்சியில் SMEs இன் முக்கிய பங்கைக் கருத்தில் கொண்டு, இந்தக் கண்காட்சியில் அவற்றின் வெளிப்பாடு மற்றும் ஈடுபாட்டிற்கு ஒப்பிட முடியாத வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன.

இது குறித்து, Profood Propack 2025 ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் வசந்த சந்திரபால தெரிவிக்கையில், “இலங்கையின் உணவுத் தொழில்துறையின் வலிமையானது, அதன் சிறப்பு வாய்ந்த பல்வகைத் தன்மைமையில் அங்கம் வகிக்கின்றது. இது பாரம்பரியமான சிறிய குடும்பங்களின் அடிப்படை தொழில்முயற்சிகள் முதல், புத்தாக்கம் மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் பெரிய அளவிலான உணவு பதப்படுத்தல் செயலாக்குநர்கள் வரை பரந்துபட்டதாகும். Profood Propack & Agbiz ஆனது இவ்வாறான பல்வகைமையை வெளிப்படுத்தி இத்துறையில் பிரகாசிப்பதற்கான ஒரு தளமாகும். இங்கு ஒவ்வொரு பங்குதாரரும், தமது அளவை பொருட்படுத்தாமல், இதில் இணைந்து, கூட்டாண்மையை ஏற்படுத்தவும், இத்துறையின் வளர்ச்சிக்கு பங்களிக்கவுமான ஒரு இடம் வழங்கப்படுகிறது. அந்த வகையில் இவ்வருட கண்காட்சியானது கூட்டாண்மைகள், முதலீடு மற்றும் அறிவுப் பரிமாற்றத்தின் தூண்டுதலாக அமையும் என நாம் எதிர்பார்க்கிறோம். இது இத்துறையின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு உதவும்.” என்றார்.

இவ்வருட பிளாட்டினம் அனுசரணையாளர்களாக Maliban Biscuit Manufactories (Pvt) Ltd, Cargills Ceylon PLC, Pakona Engineers (India) Pvt. Ltd ஆகியன திகழ்கின்றன. கோல்ட் அனுசரணையாளர்களாக Diamond Best Food (Pvt) Ltd and Aussee Oats Milling (Pvt) Ltd., சில்வர் அனுசரணையாளர்களாக, Goma Engineering (Pvt) Ltd, FPT Food Process Technology Co. Ltd, CMC Engineering Export GmbH, CBL Convenience Foods Lanka PLC, Country Style Foods (Pvt) Ltd, Rancrisp Marketing (Pvt) Ltd, Nelna Farm (Pvt) Ltd, Alli Company (Pvt) Ltd, Maliban Milk Products (Pvt) Ltd, Maliban Dairy & Agri Products (Pvt) Ltd, Freelan Enterprises, FMJ Plastics (Pvt) Ltd, Akhtari Trades (Pvt) Ltd, Nikini Automation (Pvt) Ltd, Diana Trading Co. (Pvt) Ltd. ஆகியன விளங்குகின்றன.

You may also like

Leave a Comment

About Us

Ceylon Business is your trusted hub for news, insights, and opportunities in Sri Lanka’s vibrant business landscape. From emerging startups to established enterprises, we bring you the latest updates, market trends, and inspiring success stories that shape the future of Sri Lankan commerce.

Categories

Fevicon-White in Blue-1

All rights reserved 2025