Home » 30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

by CeylonBusiness1
September 18, 2025 4:33 pm/**/ 0 comment

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின் முன்னணி வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் (NBFI) ஒன்றான Citizens Development Business Finance PLC (CDB), அதன் 30ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு கடந்த செப்டெம்பர் 09 ஆம் திகதி, கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) வர்த்தக நடவடிக்கையை தொடங்கும் வகையில் மணியோசையை எழுப்பியது. இந்த மணி ஒலியுடன், இலங்கையின் நிதிச் சேவை துறையில் டிஜிட்டல் மாற்றத்தை முன்னெடுத்துச் செல்லும் முன்னோடியான CDB நிறுவனம், தனது தொடர்ச்சியான வளர்ச்சி பயணத்திலும் ஸ்மார்ட்டான மற்றும் நிலைபேறான இலங்கையை வலுப்படுத்தும் அர்ப்பணிப்பிலும் புதிய அத்தியாயமொன்றை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்துள்ளது.

பங்குச் சந்தையின் வர்த்தக வளாகத்தில் எதிரொலித்த இந்த விசேட மணி ஒலியானது, கொழும்பு பங்குச் சந்தை ஏற்பாடு செய்த பாரம்பரிய நிகழ்வாகும். இது, கடந்த 30 வருடங்களில் CDB மேற்கொண்ட பயணத்தில், சந்தையில் அது கொண்டுள்ள நெகிழ்ச்சித் தன்மையை பிரதிபலிக்கிறது.

தமது வரவேற்புரையின்போது கொழும்பு பங்குச் சந்தையின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் அதன் நியமனப் பொறுப்பாளருமான விந்தியா ஜயசேகர, CDB நிறுவனத்தின் இந்த விசேடத்துவம் வாய்ந்த மைல்கல் தொடர்பில் வாழ்த்துகளைத் தெரிவித்தார். அவர் இங்கு குறிப்பிடுகையில், “30 ஆண்டுகளை நிறைவு செய்வதென்பது, தமது வாடிக்கையாளர்கள், முதலீட்டாளர்கள் மற்றும் பரந்த சமூகத்தின் மீது CDB கொண்டுள்ள அர்ப்பணிப்பிற்கு ஒரு உண்மையான சான்றாகும். சுமார் 15 ஆண்டுகளாக பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள CDB நிறுவனம், மூலதனச் சந்தைகளுடன் வலுவான மற்றும் பரஸ்பர நன்மை பயக்கும் உறவை உருவாக்கியுள்ளது. இது அதன் வளர்ச்சியில் முக்கிய பங்கை ஏற்படுத்தியுள்ளது. வெளிப்படைத்தன்மை, உறுதியான நிர்வாகம் மற்றும் தேசிய அபிவிருத்திக்கு அர்த்தமுள்ள பங்களிப்பு ஆகியவற்றிற்கு முன்னுதாரணமாகச் செயற்படும் நிறுவனங்களை ஆதரிப்பதில் CSE பெருமை கொள்கிறது. கடந்த மூன்று தசாப்தங்களாக மேற்கொண்ட இந்நிறுவனத்தின் பயணம், இத்தொழில்துறைக்கும் இலங்கையர்களின் வாழ்விற்கும் சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தியுள்ளது.” என்றார்.

CDB PLC நிறுவனத்தின் தலைவர் அலஸ்டயர் கொரேரா (Alastair Corera) குறிப்பிடுகையில், “எமது 30 வருடப் பயணத்தில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகளில் ஒன்றாக இந்த மணியோசை எழுப்பும் நிகழ்வு திகழ்கிறது. இதன் மூலம், CDB நிறுவனம் பங்குச் சந்தையில் பட்டியலிடுவதற்கு முன்னரும் அதற்கு பின்னருமான பயணத்தின் வெளிப்பாட்டை உற்றுநோக்கலாம்.” அவர் மேலும் குறிப்பிடுகையில், “இந்த மணியோசை ஆனது, பெருநிறுவன ரீதியான இலங்கையை மீள்வரையறை செய்கிறது. ஈடுகொடுக்கும் தன்மை, நீடித்த சக்தி மற்றும் சிறந்த தேசத்தை உருவாக்குவதற்கான அர்ப்பணிப்பு ஆகியன, எமது பயணம் எவ்வாறு உயர்வுகளையும் தாழ்வுகளையும், சாதனைகளையும், மாற்றங்களையும், எதிர்கால நோக்கையும் வடிவமைத்ததோ அதனுடன் ஒத்திசைகின்றன.” என்றார்.

banner

CDB நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான மஹேஷ் நாணயக்கார, 2009 ஆம் ஆண்டில் நிறுவனம் CSE இல் பட்டியலிடப்படுவதற்கு முன்னர் மேற்கொண்ட மிகப் பாரிய வர்த்தகநாம மீள்வடிவமைப்பு முயற்சியை இங்கு நினைவூட்டினார். “நாம் இங்கு பட்டியலிடப்பட்ட வேளையில், எமது சொத்து மதிப்பு ரூ. 10 பில்லியனுக்கும் குறைவாகவே இருந்தது. எமது பயணத்தின் முதல் 15 வருடங்களில் நாம் அந்த அளவையே எட்டியிருந்தோம். ஆயினும், 2011 முதல் 2025 வரையிலான அடுத்த 15 ஆண்டுகளில், 17 மடங்கு அபாரமான வளர்ச்சியை CDB பதிவு செய்துள்ளது. தற்போது எமது மொத்த சொத்து மதிப்பு ரூ. 170 பில்லியனைக் கடந்துள்ளது.” என அவர் குறிப்பிட்டார்.

மஹேஷ் நாணயக்கார மேலும் வலியுறுத்துகையில், “எதிர்காலத்துக்கு தயாரான, டிஜிட்டல் சார்ந்த, உறுதியான நிர்வாகம் மற்றும் இணக்கப்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட, இடைவிடாது விசேடத்துவ தரத்தை கூர்ந்து உயர்த்தும் நிதி நிறுவனமாக மாற வேண்டும் எனும் தெளிவான நோக்குடன் எமது மாற்றம் மிக்க பயணம் ஆரம்பித்தது. எமது பயணத்தில் ஆதரவாக இருந்த அனைத்து பங்குதாரர்களுக்கும் எமது மனமார்ந்த நன்றியை இவ்வேளையில் தெரிவித்துக் கொள்கிறோம். அவர்கள் எங்களை எப்போதும் புத்தாக்கத்தை நோக்கி நெருங்கச் செய்து, எமது மதிப்புகள் மற்றும் கொள்கைகளுக்கு உண்மையாய் இருக்கச் செய்தனர். எமது வாடிக்கையாளர்கள் நம்பிக்கையையும் தன்னம்பிக்கையையும் அளித்து, சவாலான காலங்களை கடக்கச் செய்ததோடு, சிறந்த இலங்கையை உருவாக்க நாம் சேவையாற்றும் சமூகங்கள் காரணமாகவும் இருந்தன. இன்று இந்த மணி ஓசையை எழுப்புவதன் மூலம், நாம் எமது 30 வருட பயணத்தை மாத்திரமல்லாமல், இந்த தேசத்தையும் எமது பூமியையும் சிறப்பாக மாற்றும் எமது அடுத்த அத்தியாயத்தையும் வெளிச்சத்துக்கு கொண்டுவந்துள்ளோம்.” என்றார்.

You may also like

Leave a Comment

About Us

Ceylon Business is your trusted hub for news, insights, and opportunities in Sri Lanka’s vibrant business landscape. From emerging startups to established enterprises, we bring you the latest updates, market trends, and inspiring success stories that shape the future of Sri Lankan commerce.

Categories

Fevicon-White in Blue-1

All rights reserved 2025