Home » Visa Accept: HNB உடன் இணைந்து Visa அறிமுகப்படுத்தும் புரட்சிகரமான கொடுப்பனவு ஏற்புத் தீர்வு

Visa Accept: HNB உடன் இணைந்து Visa அறிமுகப்படுத்தும் புரட்சிகரமான கொடுப்பனவு ஏற்புத் தீர்வு

by CeylonBusiness1
September 24, 2025 12:10 pm/**/ 0 comment

டிஜிட்டல் வழிமுறை கொடுப்பனவுத் தீர்வுகளில் உலகில் முன்னிலை வகித்து வருகின்ற வீசா, ஹட்டன் நஷனல் வங்கியுடன் (HNB) இணைந்து, உலகளாவில் முதல்முறையாக, இலங்கையில் Visa Accept ஐ அறிமுகம் செய்து வைக்கின்றமை குறித்து இன்று அறிவித்துள்ளது. உலகிலேயே முதல்முறையாக இத்தீர்வு அறிமுகம் செய்து வைக்கப்படுவதுடன், டிஜிட்டல் வழிமுறை கொடுப்பனவு சார்ந்த புத்தாக்கத்தில் இது எமது நாட்டை முன்னிலைப்படுத்தியுள்ளது.

பொருளாதாரத்தின் முதுகெலும்பாக நுண் மற்றும் சிறிய அளவிலான தொழில் முயற்சிகள் காணப்படுகின்ற நிலையில், இலங்கை அவற்றுக்கு புத்துயிரளிப்பதில் கூர்மையாக கவனம் செலுத்தி வருகின்றமையைப் பொறுத்தவரையில் இது தக்கதருணத்தில் மேற்கொள்ளப்படுகின்ற ஒன்றாக மாறியுள்ளது.

டிஜிட்டல் வர்த்தகத் துறையில் பாரம்பரியமாக கைவிடப்பட்டுள்ள நுண் வணிகர்கள் முகங்கொடுக்கின்ற முட்டுக்கட்டைகளை ‘Visa Accept’ அகற்றுகின்றது. டிஜிட்டல் வழிமுறையில் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதில் கால்பதிப்பதற்கு பொறுப்பேற்க வேண்டிய செலவுகளைக் குறைப்பதன் மூலமாக, நிதியியல் ரீதியாக சம வாய்ப்பிற்கு நேரடியாக உதவி, புதிய பொருளாதார வாய்ப்புக்களை நுண் வணிகங்கள் கைப்பற்றிக் கொள்ள உதவ ‘Visa Accept’ நேரடியாக உதவுகின்றது. பெண் தொழில் முனைவோர் மற்றும் வீடுகளிலிருந்து சிறு வியாபார முயற்சிகளை மேற்கொள்கின்றவர்களுக்கு வளர்ச்சி மற்றும் அவற்றை விரிவுபடுத்துவதற்கான பாதுகாப்பான மற்றும் இலகுவான வழிமுறையை இத்தீர்வு வழங்குகின்றது.

வணிகர் கணக்கொன்றை ஆரம்பிப்பது என்பது நீண்ட காலமாகவே சிக்கலான ஆவண நடைமுறை, அனுமதிப் பத்திரம், மற்றும் விலைகூடிய விற்பனைப்புள்ளி சாதனங்கள் போன்ற சவால்களைக் கொண்டுள்ள நிலையில், தமது மொபைல் தொலைபேசியை மாத்திரம் உபயோகித்து, ஹட்டன் நஷனல் வங்கியின் மொபைல் வங்கிச்சேவை செயலியினூடாக, வீசா டெபிட் அல்லது வீசா முற்கொடுப்பனவு செய்யப்பட்ட அட்டைதாரர் எவரும் தாம் ஏற்கனவே கொண்டுள்ள கணக்கினை உடனடியாக விற்பனையாளர் உபயோகிக்கக்கூடியதாக மாற்றிக்கொள்வதற்கு ‘Visa Accept’ இடமளிக்கின்றது.

banner

ஒரு சில நொடிப்பொழுதில் நுண்வணிகங்கள் அட்டைக் கொடுப்பனவுகளை ஏற்கக்கூடியதாக உள்ளதுடன், அன்றாட ஸ்மார்ட்போன்களை கொடுப்பனவுகளை பாதுகாப்பாக ஏற்றுக்கொள்ளும் சாதனங்களாக மாற்றியமைக்கின்றது. தொலைபேசியில் அட்டையை தொடுகை செய்வதனூடாக (Tap-to-phone) அல்லது இணைப்பிற்கு சென்று செலுத்துவதனூடாக (Pay-by-link) வாடிக்கையாளர்கள் பரிவர்த்தனைகளை பூர்த்தி செய்ய முடிவதுடன், விற்பனையாளருக்கும், நுகர்வோருக்கும் பாதுகாப்பான மற்றும் தங்குதடையற்ற கொடுப்பனவு அனுபவத்திற்கு இடமளிக்கின்றது.

முதன்முதலாக இணையவழியில் தனது முதலாவது ஆர்டரைப் பெற்று வீட்டில் வைத்து கேக் செய்து விற்பவரானாலும் சரி, பணப் பயன்பாட்டிற்கு அப்பால் தனது விற்பனை நடவடிக்கையைக் கொண்டு செல்ல விரும்புகின்ற காய்கறி வியாபாரியானாலும் சரி, அல்லது புதிய கொள்வனவாளர்களை சம்பாதிக்க விரும்புகின்ற கைவினைப் பொருட்களை விற்பவரானாலும் சரி, பொருளாதாரீதியான வாய்ப்பினை விரிவுபடுத்துவதில் சர்வசாதாரணமாக தொலைபேசியை நுழைமுகமாக உபயோகித்து, இலங்கையில் நுண் வர்த்தகங்களை மேம்படுத்துவதற்கு ‘Visa Accept’ உதவும்.

விற்பனையாளர்கள் தமது வருவாயை உடனடியாகப் பெற்றுக்கொள்ளும் வகையில், உரிய நிதி முடிந்த வரை விரைவாக நிகழ்நேரத்தில் கிடைப்பதற்கு வீசா வலையமைப்பு இதன் பின்புலத்தில் செயற்பட்டு உறுதி செய்கின்றது. மேற்கொள்ளப்படக்கூடிய பரிவர்த்தனைகள் மற்றும் தொகைகளின் எண்ணிக்கைகள் முற்கூட்டியே உட்கட்டமைக்கப்பட்டு, இழப்பு ஆபத்தைக் குறைத்து, டிஜிட்டல் வழிமுறையில் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதில் பாதுகாப்பான, மற்றும் விரிவுபடுத்தப்படக்கூடிய சூழலை ‘Visa Accept’ தோற்றுவிக்கின்றது. கையில் சொற்ப பணப்புழக்கத்துடன் தமது செயல்பாடுகளை முன்னெடுக்கின்ற நுண்-வணிகர்களுக்கு உயிர்வாழ்தல் என்ற நிலையிலிருந்து வர்த்தகத்தை விரிவுபடுத்திக் கொள்ளல் என்ற வேறுபாட்டுக்கு இந்த உடனடி நிதி வரவு வழிவகுக்கின்றது.

வீசா நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவு ஆகிய நாடுகளுக்கான முகாமையாளர் அவாந்தி கொலம்பகே இந்த அறிமுகம் குறித்து கருத்து தெரிவிக்கையில், “Visa Accept என்பது வெறுமனே ஒரு கொடுப்பனவுத் தீர்வு புத்தாக்கம் என்பதற்கும் அப்பாற்பட்டது. இது நுண் வணிகர்களை முறைசார் பொருளாதாரத்தில் உள்வாங்குவதற்கு இடமளித்து, பொருளாதார பங்கேற்பை விரைவுபடுத்தி, நிதியியல் ரீதியாக சம வாய்ப்பளிப்பை நோக்கிய மூலோபாயரீதியாக முன்னோக்கிய ஒரு படியாகும். வீசா டெபிட் அல்லது முற்கொடுப்பனவு அட்டையை உபயோகித்து எவரும் ஒரு சில நொடிகளில் விற்பனையாளராக மாறுவதை சாத்தியமாக்குவதன் மூலமாக, கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதை நாம் இலகுபடுத்துவது மாத்திரமன்றி, டிஜிட்டல் பொருளாதாரத்தில் அவர்கள் வளம் காண்பதற்கான புதிய வழிமுறைகளையும் ஏற்படுத்துகிறோம். HNB உடனான இக்கூட்டாண்மையின் மூலமாக, இலங்கையில் மிகவும் நம்பிக்கைக்குரிய வங்கிச்சேவை வலையமைப்புக்களின் ஒன்றினூடாக இத்தீர்வை வீசா உட்கொண்டு வந்துள்ளது. வாடிக்கையாளர்கள் தமது HNB மொபைல் வங்கிச்சேவை செயலியினூடாக (app) தமது Visa Accept ஐ நேரடியாக செயல்படுத்திக் கொள்ள முடியும். வாய்ப்புக்களையும், இதனைக் கையாள்வதன் பாதுகாப்பையும் சமநிலையில் பேணும் வகையில் பரிவர்த்தனை தொகைகளின் உச்சவரம்புகள் மிகக் கவனமாகத் திட்டமிடப்பட்டு, ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அதேசமயம், விற்பனையாளர்களும் மற்றும் நுகர்வோரும் வீசாவின் சர்வதேச பாதுகாப்பு தரநியமங்களின் பாதுகாப்பைப் பெற்றுக்கொள்கின்றனர். உலகளாவில் இத்தீர்வை வீசா அறிமுகப்படுத்தியுள்ள முதல் நாடாக இலங்கை மாறியுள்ளது. இலங்கையில் டிஜிட்டல் பரிணாம வளர்ச்சி மற்றும் சமூக-பொருளாதார மேம்பாடு ஆகியவற்றில் நாம் தொடர்ச்சியாக காண்பித்து வருகின்ற அர்ப்பணிப்பை இது அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது.”

ஹட்டன் நஷனல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர் தமித் பலவத்த கருத்து வெளியிடுகையில், “எமது மொபைல் வங்கிச்சேவை செயலியில் Visa Accept தற்போது ஒருங்கிணைப்புச் செய்யப்பட்டுள்ளதனூடாக, பல்லாயிரக்கணக்கான நுண் மற்றும் சிறு வணிகங்கள் தமது மொபைல் தொலைபேசியை மாத்திரம் உபயோகித்து, டிஜிட்டல் வழிமுறையில் கொடுப்பனவுகளை உடனடியாக ஏற்றுக்கொள்வதற்கு HNB இடமளிக்கின்றது. நிதியியல் அணுகலுக்கான வாய்ப்புக்களை நவீனமயப்படுத்தி, தொழில்முயற்சியாண்மை கட்டமைப்பை மேம்படுத்தி, இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவுவதில் முக்கியமானதொரு முன்னோக்கிய படியை இது குறித்து நிற்கின்றது. தனது பரிணாம வளர்ச்சியை நாடு விரைவுபடுத்தியுள்ள நிலையில், இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தைச் செதுக்குவதில் நம்பிக்கைக்குரிய கூட்டாளர் என்ற எமது வகிபாகத்தை நாம் மீண்டும் உறுதிப்படுத்துகிறோம்.”

இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜுலி ஜே. சாங் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்து இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “Visa Accept என்பது வெறுமனே ஒரு கொடுப்பனவுத் தீர்வு என்பதற்கும் மேலானது. இலங்கையின் எதிர்காலத்தை முன்னெடுத்துச் செல்லவல்ல படைப்பாக்கத்திறன் மற்றும் தொழில்முயற்சியாண்மை உணர்வு ஆகியவற்றை இது வெளிக்கொண்டு வருகிறது. கொடுப்பனவுகளை விரைவாகவும், இலகுவானதாகவும், மற்றும் கூடுதல் பாதுகாப்பு மிக்கதாகவும் ஆக்குவதன் மூலமாக, சிறு வணிகங்கள் சர்வதேச சந்தைகளை எட்டி, தமது அடைவுமட்டத்தை விரிவுபடுத்தி, மற்றும் தமது செயல்பாடுகளை நவீனமயமாக்குவதற்கு இப்புத்தாக்கம் உதவுகின்றது. 35 ஆண்டுகளுக்கும் மேலாக இலங்கையில் நம்பிக்கைக்குரிய கூட்டாளராக வீசா திகழ்ந்து வருவதுடன், ஹட்டன் நஷனல் வங்கி மற்றும் டிஜிட்டல் பொருளாதார அமைச்சு ஆகியவற்றுடனான அதன் ஒத்துழைப்பு, இலங்கையின் டிஜிட்டல் பரிணாம வளர்ச்சி மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றுக்கு உதவுவதில் அமெரிக்க நிறுவனங்கள் காண்பிக்கும் அர்ப்பணிப்புக்கு மற்றுமொரு தெளிவான சமிக்ஞையாகும்.”

‘Visa Accept’ அறிமுக நிகழ்வில் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பிரதி அமைச்சர் பொறியியலாளர் எரங்க வீரரத்ன அவர்கள் கருத்து வெளியிடுகையில், “சம வாய்ப்பு, புத்தாக்கம், மற்றும் வலுவூட்டல் ஆகியவற்றுக்கு முன்னுரியமையளித்தவாறு, பரிணாம வளர்ச்சியுடனான ஒரு கட்டத்தினுள் இலங்கையின் டிஜிட்டல் பொருளாதாரம் காலடியெடுத்து வைத்துள்ளது. வர்த்தகத்தை டிஜிட்டல்மயமாக்கி, நுண் மற்றும் சிறிய வணிகங்களை மேம்படுத்தி, பொருளாதாரரீதியான பங்கேற்பினை விரைவுபடுத்தும் எமது தேசிய இலக்கிற்கு நேரடியாக ஆதரவளிக்கின்ற தக்க தருணத்தில் இடம்பெறும் மூலோபாயரீதியான புத்தாக்கமாக Visa Accept ன் அறிமுகம் காணப்படுகின்றது. வளர்ச்சி வாய்ப்புக்களை வெளிக்கொண்டு வந்து, இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்திற்கு வலுவூட்டுவதில் வீசா மற்றும் ஹட்டன் நஷனல் வங்கி ஆகியவற்றின் தொடர்ச்சியான கூட்டாண்மையை நாம் மிகவும் மதிக்கின்றோம்.”

2025 செப்டெம்பர் 24 அன்று இடம்பெற்ற FinTech Festival நிகழ்வில் ‘Visa Accept’ தீர்வு உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

வீசா (Visa Inc) பற்றி
டிஜிட்டல் கொடுப்பனவுகளில் உலகளாவில் முன்னிலை வகித்து வருகின்ற Visa (NYSE: V), 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களில் நுகர்வோர்கள், வணிகர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரச நிறுவனங்களுக்கு இடையில் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்கு அனுசரணையளித்து வருகிறது. தனிநபர்கள், வணிகங்கள் மற்றும் பொருளாதாரங்கள் வளம் காண்பதற்கு இடமளித்து, புத்தாக்கம் மிக்க, சௌகரியமான, நம்பிக்கைமிக்க, மற்றும் பாதுகாப்பான கொடுப்பனவுகள் வலையமைப்பினூடாக உலகினை இணைப்பதே எமது நோக்கம். அனைவரையும் எங்கேயும் உள்ளடக்கின்ற, அனைவரையும் எங்கேயும் மேம்படுத்துகின்ற பொருளாதாரங்கள் பணவியக்கத்தின் எதிர்காலத்திற்கான அத்திவாரத்திற்கான அணுகலைக் கொண்டுள்ளன என நாம் நம்புகின்றோம்.

மேலதிக விபரங்களுக்கு Visa.com

You may also like

Leave a Comment

About Us

Ceylon Business is your trusted hub for news, insights, and opportunities in Sri Lanka’s vibrant business landscape. From emerging startups to established enterprises, we bring you the latest updates, market trends, and inspiring success stories that shape the future of Sri Lankan commerce.

Categories

Fevicon-White in Blue-1

All rights reserved 2025