Home » சாகசத்தை நாளாந்த வாழ்க்கைக்காக மீள்வடிவடிமைக்க, Jeep Wrangler மற்றும் Gladiator வாகனங்களை இலங்கைக்குக் கொண்டு வரும் DIMO

சாகசத்தை நாளாந்த வாழ்க்கைக்காக மீள்வடிவடிமைக்க, Jeep Wrangler மற்றும் Gladiator வாகனங்களை இலங்கைக்குக் கொண்டு வரும் DIMO

by CeylonBusiness1
October 21, 2025 10:28 am/**/ 0 comment

இலங்கையில் ஜீப் வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், அன்றாடப் பயன்பாடு மற்றும் சாகசம் மிக்க பயணங்கள் ஆகிய இரண்டையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், முற்றிலும் புதிய 2025 Jeep Wrangler மற்றும் Jeep Gladiator ஆகிய வாகனங்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த அறிமுக நிகழ்வானது, Legends Unleashed 2025 எனும் பெயரில் மூன்று நாள் சாகசப் பயணமாக இடம்பெற்றது. இந்நிகழ்வானது, வாகன அறிமுகமா அல்லது அதனைப் பயன்படுத்தும் உண்மையான அனுபவமா என பங்குபற்றியோரை வியப்புக்குள்ளாக்கியது. கொழும்பில் உள்ள DIMO 800 வளாகத்தில் இருந்து புறப்பட்ட Jeep Gladiator மற்றும் Wrangler வாகனங்களின் பேரணியானது, மின்னேரியா தேசிய பூங்காவை நோக்கிச் சென்று, அதன் பின்னர் கிரித்தலை அதைத் தொடர்ந்து ஹபரணைக்குச் சென்றது. இந்த பயணத்தின் போது, வாடிக்கையாளர்கள் சகதிகள் கொண்ட பாதைகள், திறந்த மாடியில் விருந்துகள் போன்ற அனுபவங்களை பெற்றனர். அவர்கள் திறந்த வானத்தின் நட்சத்திரங்களை பார்த்தபடி இசை, நடனங்கள், குதூகலமான கேள்வி பதில்கள் நிறைந்த BBQ இரவு அனுபவங்களையும் பெற்றனர். அத்துடன் ஒரே அணியாக நகரும் வாகன அணிவகுப்பின் போதான நட்பு ஆகியவற்றின் மூலம் ஜீப் உலகில் அவர்கள் மூழ்கினர். இது வாகன அறிமுகத்தையும் கடந்து, ஜீப்பின் கொள்கையான “One Jeep, Many Lives” (ஒரு ஜீப், பல வாழ்க்கை) என்பது இலங்கையில் இன்னும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை உறுதிப்படுத்தியது.

2025 Jeep Wrangler ஆனது, அதே வகையான வாகன வகையில் மிகவும் திறன்மிக்க SUV என்ற புகழைத் தொடர்ச்சியாக தக்க வைத்துக் கொண்டுள்ளது. அதன் தனித்துவமான நீக்கக்கூடிய கூரை மற்றும் கதவுகள் ஒவ்வொரு பயணத்தையும் திறந்தவெளி அனுபவமாக மாற்றுகின்ற அதே நேரத்தில், Trail-Rated® 4×4 தொழில்நுட்பமானது எந்தவொரு நிலப்பரப்பையும் கடக்க முடியும் என்பதை உறுதி செய்கிறது. தனித்தன்மை, நம்பகத்தன்மை, சுதந்திரம் ஆகிய அனைத்தையும் ஒரே அளவில் விரும்பும் தொழில் வல்லுநர்கள், தொழில்முனைவோர் மற்றும் குடும்பத்தினரை Wrangler ஈர்க்கிறது. சபாரி, வீதிப் பயணங்கள் அல்லது வார இறுதிப் பயணங்களை எதிர்பார்க்கின்ற, திறந்த வெளியுலகை அறிய விரும்பும் ஆர்வலர்களுக்கு இது ஒரு சிறந்த தெரிவாகும்.

இதேவேளை Jeep Gladiator ஆனது, பிக்கப் வாகனப் பிரிவு வகையை சார்ந்த சக்தியாக அமைகிறது. அதிக பாரம் இழுக்கும் திறன், தரைக்கு இடையிலான அதிக இடைவெளி, அனைத்து விதமான சூழலுக்கும் ஈடுகொடுக்கக் கூடிய (trail-rated) நீடித்து உழைக்கும் தன்மையுடன் கூடிய இது ஒரு சாகசக்காரனின் உயிரோட்டத்துடன் இணைந்த உழைக்கும் குதிரையாக திகழ்கிறது. நீக்கக்கூடிய கூரை மற்றும் கதவுகள் உள்ளிட்ட, திறந்தவெளி வாகனப் பயண அனுபவத்தைக் கொண்ட ஒரேயொரு பிக்கப் வகை வாகனமாக இருப்பதே இதன் தனித்துவமாகும். இது பயன்பாட்டிற்கும் வாழ்க்கை முறைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைக்கிறது. கடினமான வீதிகளுக்கு ஏற்ற வகையிலும் அதே வேளையில் தினசரி பயன்பாட்டிற்குப் போதுமான வகையிலும் கூடிய ட்ரக் வாகனத்தை விரும்புவோருக்கு, அந்த இரு உலகங்களிலும் சிறந்ததை Gladiator வழங்குகிறது.

banner

இந்த வாகனங்களின் அறிமுகம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த DIMO நிறுவனத்தின் உயர் ரக பிரீமியம் பயணிகள் வாகன விற்பனைப் பொது முகாமையாளரான தரங்க குணவர்தன, “ஜீப் வாகனமானது, உள்ளக பாதை சாகசத்திற்கு ஏற்ற வாகனமாக நீண்ட காலமாக திகழ்ந்து வருகின்றது. ஆனால் இன்றைய வாடிக்கையாளர்களுக்குத் ஒரே வாகனத்தில் திறனும் அன்றாடப் பயன்பாடும் அவசியமாக உள்ளது. Wrangler மற்றும் Gladiator மூலம், சாகசத்தை உள்ளடக்கிய அதே நேரத்தில் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ற வாகன வகைகளை நாம் அறிமுகப்படுத்துகிறோம். அவை அன்றாட வாழ்க்கைக்காக வடிவமைக்கப்பட்ட பிரீமியம் வாகனங்களாக இருந்த போதிலும், ஜீப்பில் காணப்படும் புகழ்பெற்ற கம்பீரமான உணர்வை ஒருபோதும் விட்டுக் கொடுக்காது.” என்றார்.

Wrangler மற்றும் Gladiator வாகனங்களுக்கு உறுதுணையாக இருக்கும் வகையில், அவ்வாகனங்களின் வாக்குறுதிக்கு இணையாக அமைக்கப்பட்டுள்ள DIMO நிறுவனத்தின் விரிவான விற்பனைக்குப் பிந்தைய வசதிகள் அமைகின்றன. விற்கப்படும் ஒவ்வொரு ஜீப் வாகனமும் ஐந்து வருடங்கள் அல்லது 150,000 கி.மீ. உத்தரவாதத்துடன் வருகிறது. அத்துடன், புதிய மாதிரிகள் தொடர்பான பயிற்சிகளைப் பெற்ற MOPAR சான்றளிக்கப்பட்ட தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் MOPAR இன் விசேட கருவிகள் மற்றும் அசல் உதிரிப்பாகங்களைக் கொண்டு மாத்திரமே பழுதுபார்ப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. மென்பொருள் புதுப்பிப்புகள் மூலம் வாகனங்கள் அதிகபட்ச செயல்திறனில் இயங்குவதால் உரிமையாளர்கள் பயனடையும் அதே நேரத்தில், சேவையின் போதான டிஜிட்டல் பதிவுகள் காரணமாக விற்கும் போது அல்லது மேம்படுத்தலுக்கு உட்படுத்தும் போது அதன் நீண்ட கால மதிப்பை பாதுகாக்க முடிகின்றது.

கொழும்பில் காற்றுப் போன ஒரு டயராக இருந்தாலும் அல்லது யாழ்ப்பாணத்தில் திடீர் பிரச்சினையை எதிர்கொண்ட வாகமாக இருந்தாலும், நாடு முழுவதும் 24 மணி நேரமும் வீதிவழி உதவிகளை வழங்குவதன் மூலம், காட்சியறையைத் தாண்டிய வாக்குறுதியை ஜீப் வாகனத்திற்கு DIMO நிறுவனம் வழங்குகிறது. அர்ப்பணிப்புள்ள ஜீப் சேவை ஆலோசகர்களின் வழிகாட்டலை இணைப்பதன் மூலம், அனுபவம் நம்பிக்கை மற்றும் மன அமைதியை உரிமையாளர் பெறுவது உறுதி செய்யப்படுகின்றது.

Wrangler மற்றும் Gladiator வாகனங்களை அறிமுகப்படுத்துவதன் மூலம், DIMO நிறுவனம் மேலும் இரண்டு புதிய வாகனங்களை இலங்கைக்குக் கொண்டு வந்துள்ளதோடு மட்டுமல்லாமல், ஜீப் வாகனத்தின் வாழ்க்கை முறையை மேலும் விரிவுபடுத்தி, தற்போது சாகச அனுபவத்தை அன்றாடப் பயன்பாட்டுடன் இணைக்கிறது. அத்துடன் துணிச்சலான உணர்வுடன் சிறந்த சேவையையும் இணைகிறது. DIMO நிறுவனத்தின் ஆதரவுடன், ஒவ்வொரு பயணமும், அது நகர்ப்புறப் பயணமாக இருந்தாலும் சரி அல்லது காட்டுப் பாதையாக இருந்தாலும் சரி, அதற்கான முழுமையான ஆதரவு கிடைக்கும் எனும் உறுதியுடன், இலங்கையர்கள் ஜீப் வாகனங்களுக்கான உரிமையை நம்பிக்கையுடன் பெற்றுக் கொள்ளலாம்.

You may also like

Leave a Comment

About Us

Ceylon Business is your trusted hub for news, insights, and opportunities in Sri Lanka’s vibrant business landscape. From emerging startups to established enterprises, we bring you the latest updates, market trends, and inspiring success stories that shape the future of Sri Lankan commerce.

Categories

Fevicon-White in Blue-1

All rights reserved 2025