Home » ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் மற்றும் Medihelp Hospitals இணைந்து சுவஜீவ நீரிழிவு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன 

ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் மற்றும் Medihelp Hospitals இணைந்து சுவஜீவ நீரிழிவு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளன 

by CeylonBusiness1
November 13, 2025 11:31 am/**/ 0 comment

இலங்கையில் மருந்துப்பொருட்கள் விநியோகத்தில் சந்தை முன்னோடியும், ஹேமாஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் துணை நிறுவனமுமான ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் (பிரைவட்) லிமிடெட், Medihelp Hospitals உடன் இணைந்து சுவஜீவ நீரிழிவு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை முன்னெடுக்க முன்வந்திருந்தது. அதில் முதலாவது திட்டம், கொழும்பு 02 இலுள்ள Medihelp Wellness Centre இல் ஒக்டோபர் 23 மற்றும் பண்டாரகமயிலுள்ள Medihelp Hospital இல் ஒக்டோபர் 28 ஆம் திகதியும், ஹோமகம Medihelp வைத்தியசாலையில் ஒக்டோபர் 30ஆம் திகதியும் நடைபெற்றன.

நீரிழிவால் இனங்காணப்பட்ட நோயாளர்களுக்கு உதவிகளை வழங்குவதை இலக்காகக் கொண்டு வடிவமைக்கப்பட்ட இந்தத் திட்டம், பங்கேற்றவர்களுக்கு பரந்தளவு சுகாதார சேவைகளை வழங்குவதாக அமைந்திருந்தது. பரிசோதனை மற்றும் ஆரம்பத்தில் நீரிழிவு இனங்காணல் என்பதற்கு மேலதிகமாக, நோயாளர்களுக்கு குருதிப் பரிசோதனை, குருதி அழுத்த அளவீடு, BMI மதிப்பாய்வு மற்றும் குளுக்கோமா மற்றும் ரெடினோபதி ஆகியவற்றை இலவசமாக மேற்கொள்ளும் வசதியை வழங்கியிருந்தது. நோயாளர்களுக்கும், பங்கேற்றவர்களுக்கும் பரந்த, பரிபூரண பராமரிப்பை வழங்கியதுடன், ஒன்றிணைந்த மருத்துவ, போஷாக்கு மற்றும் வாழ்க்கைமுறை ஆதரவையும் வழங்கியது. 

ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸின் முகாமைத்துவ பணிப்பாளர் வைத்தியர். மஹேஷா ரணசோம இந்நிகழ்வில் கருத்துத் தெரிவிக்கையில், “நீரிழிவு தொடர்பில் பராமரிப்பு மற்றும் ஆதரவை வழங்குவது தொடர்பில் எமது முயற்சிகளை மேம்படுத்துவதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பை நாம் வரவேற்கிறோம். சுவஜீவ நீரிழிவு பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சியினூடாக, நோயாளர்களின் வாழ்வை எளிமைப்படுத்தும் சேவைகளை வழங்குவதற்கான எமது ஆற்றலை விரிவாக்கம் செய்வது மட்டுமன்றி, எதிர்காலத்தில் பெருமளவு பாரிய திட்டங்களை முன்னெடுப்பதற்கான அடித்தளத்தை ஏற்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.” என்றார்.

banner

Medihelp Hospitals உடன் கைகோர்த்து செயலாற்றியதனூடாக, மக்களை சிறப்பாக வாழச் செய்யும் ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸின் நோக்குடன் பொருந்தச் செய்வதாக அமைந்திருந்தது. ஒவ்வொரு பிரஜையினதும் உடல்நலம் மற்றும் நல்வாழ்வுக்கான உரிமை உள்ளது என்பதைப் புரிந்துகொண்டு, நீரிழிவு நோயுடன் வாழ்பவர்களின் வாழ்க்கையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அடிப்படை ஆதரவை இந்த முயற்சி வழங்கியது.

Medihelp Hospitals இன் பிரதம செயற்பாட்டு அதிகாரி நிஷாந்த ஜயமான்ன கருத்துத் தெரிவிக்கையில், “இந்த முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சித் திட்டத்தை அறிமுகம் செய்வதற்காக ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸ் உடன் கைகோர்ப்பதையிட்டு நாம் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இலங்கையின் மாபெரும் அடிப்படை பராமரிப்பு தொடர் எனும் வகையில், இந்தத் திட்டம் எமது நோக்கான, சமூகத்தின் பரந்த பிரிவினருக்கு தரமான சுகாதாரப் பராமரிப்பை அணுகச் செய்வது என்பதுடன் பொருந்துவதாக அமைந்துள்ளது. தொற்ற நோய்கள் (NCDs) தொடர்பில் பரிசோதனைகளை ஊக்குவிப்பதில் நாம் பிரதானமாக கவனம் செலுத்தி, ஆரம்பத்தில் இனங்காண்பது மற்றும் சிகிச்சையளிப்பதை ஊக்குவிக்கிறோம்.  எமது பகிரப்பட்ட இலக்குகளுடன் ஒன்றிணைந்து, வினைத்திறனான மற்றும் அணுகக்கூடிய சுகாதார பராமரிப்புக்கான சர்வதேச உரிமையை மேம்படுத்த எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

இந்தச் சுகாதாரப் பரிசோதனைத் திட்டம், பங்கேற்றவர்களுக்கு நீரிழிவு நோயை சுயமாகவே நிர்வகிக்கத் தேவையான அறிவு மற்றும் கல்வியைப் பெற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்கியது. இது பயனுள்ள மற்றும் சீரான சிகிச்சையை ஊக்குவித்ததுடன், நீரிழிவு நோய் மற்றும் அது தொடர்பான சிக்கல்கள் குறித்த விழிப்புணர்வை உருவாக்குவதற்கான அடித்தளத்தையும் அமைத்தது. சுகாதாரச் சேவைகள் மற்றும் தகவல்களுக்கான அணுகலை மேம்படுத்துவதன் மூலம் சுகாதார அமைப்பை மேம்படுத்த வேண்டும் என்ற ஹேமாஸ் பார்மசியுட்டிகல்ஸின் இலக்கில் புதிய அத்தியாயமாக இந்த முன்முயற்சி அமைந்துள்ளது.

You may also like

Leave a Comment

About Us

Ceylon Business is your trusted hub for news, insights, and opportunities in Sri Lanka’s vibrant business landscape. From emerging startups to established enterprises, we bring you the latest updates, market trends, and inspiring success stories that shape the future of Sri Lankan commerce.

Categories

Fevicon-White in Blue-1

All rights reserved 2025