இலங்கையின் மிகவும் உயர்வான, மற்றும் முதற்தர புத்தம்புதிய பால் வர்த்தகநாமமான அம்பேவல, நுகர்வோர் மீதான தனது அர்ப்பணிப்பை காலை ஆகார மேசைக்கும் அப்பால் நீட்டித்து, அன்றாட ஊட்டச்சத்து தேவைகளை, அதிவிசேட அனுபவங்களுடன் இணைக்கின்ற பிரத்தியேக நுகர்வோர் ஊக்குவிப்புப் போட்டியொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
மகத்துவம் என்ற தனது பாரம்பரியத்தை உண்மையாகக் கட்டிக்காத்து, வர்த்தகநாமத்தைப் போலவே உயர்வான அனுபவத்துடன் தனது விசுவாசம் மிக்க நுகர்வோருக்கு தற்போது வெகுமதியளிக்கவுள்ளது. நாடெங்கிலும் தனது புத்தம்புதிய பாலை நுகர்வோருக்கு மறக்க முடியாத ஆடம்பர விடுமுறையை வெற்றி கொள்வதற்கான வாய்ப்புடன், வியப்பூட்டும் புதிய நுகர்வோர் ஊக்குவிப்பொன்றை இவ்வர்த்தகநாமம் ஆரம்பித்துள்ளது. 1 லீட்டர் அம்பேவல புத்தம்புதிய பாலை அல்லது ஆடை நீக்கிய பால் பாக்கெட்டை கொள்வனவு செய்யும் ஒவ்வொரு முறையும் 10 பிரத்தியேக உயர்வான விடுமுறைத் திட்டங்களை வெல்லும் வாய்ப்பினை நுகர்வோர் பெற்றுக்கொள்வர். இந்த ஊக்குவிப்பு 10 வாரங்களுக்கு முன்னெடுக்கப்படவுள்ளதுடன், வாரந்தோறும் ஒரு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர் என்ற அடிப்படையில் 10 வெற்றியாளர்களுக்கு வெகுமதியளிக்கப்படவுள்ளது.
இதற்கான பொறிமுறை மிகவும் எளிதானது: 1 லீட்டர் பாக்கெட்டில் பொறிக்கப்பட்டுள்ள QR குறியீட்டை ஸ்கேன் செய்து, கொள்வனவுக்கான சான்றுடன், தமது விபரங்களை பூர்த்தி செய்து, சீட்டிழுப்பில் நுழைந்து கொள்வதற்கு அம்பேவல முகநூல் பக்கத்தை follow பண்ண வேண்டும். கொள்வனவு செய்யும் பாக்கெட் ஒவ்வொன்றும் வெல்வதற்கான மற்றுமொரு வாய்ப்பாகும். வெற்றியாளர்கள் full-board அடிப்படையில் Heritance Kandalama, Heritance Tea Factory, அல்லது Heritance Ahungalla ஆகிய புகழ்பூத்த Heritance ஹோட்டல்களில் இரு நாட்கள் தங்குவதற்கான உயர்வான அனுபவத்தைப் பெற்றுக்கொள்வர். பிரத்தியேக சமையல் கலைஞரின் சேவை உள்ளிட்ட உயர் வகுப்பு தங்கறைத் தொகுதி, விசேட ஏற்பாட்டுடனான மெழுகுவர்த்தி ஒளியுடன் இராப்போசனம், தனிப்பட்ட உணவு விருந்து ஏற்பாடு, மற்றும் இலவச வைன் போத்தல்கள் ஆகியவற்றுடன் உண்மையில் வசீகரிக்கும் விடுமுறை அனுபவத்தைப் பெற்றுக்கொள்வர். இந்த அனுபவத்தை இன்னும் மறக்க முடியாததாக மாற்றியமைக்கும் வகையில், ஒவ்வொரு ஹோட்டல் அமைந்துள்ள இடங்களிலும் விசேட சுற்றுலா ஏற்பாட்டுடனான தனித்துவமான அனுபவங்களையும் அவர்கள் பெற்று மகிழ்வர்.
Heritance Kandalama ஹோட்டலில் வெற்றியாளர்கள் மலைப்பூட்டும் நிலப்பகுதியில் யானைகள் சுதந்திரமாக உலா வருகின்ற மின்னேரிய ஊடாக வனவிலங்கு சஃபாரி சாகசச் சுற்றுலாவுடன் மறக்க முடியாத அனுபவத்தைப் பெற்றுக்கொள்வர். Heritance Tea Factory வெற்றியாளர்களுக்கு, பிரத்தியேகமான சீஸ் சுவையனுபவத்துடன் இலங்கையின் மிகவும் அதிநவீன பாற்பொருள் உற்பத்திப் பண்ணையான அம்பேவல பண்ணைக்கு வழிகாட்டியுடனான சுற்றுலா, அதனைத் தொடர்ந்து வரலாற்றுச் சிறப்பு மிக்க தேயிலைத் தொழிற்சாலைக்கான சுற்றுலா ஆகிய அனுபவங்கள் கிடைக்கும். Heritance Ahungalla விருந்தினர்களுக்கு மாது கங்கையின் கண்டல் தாவரங்களினூடாக, அழகிய பின்னணி காட்சிகள் மற்றும் கிறங்க வைக்கும் படகுச் சவாரி அனுபவம் கிடைக்கும்.
வெறுமனே பாற்பொருட்கள் மாத்திரமன்றி, அவற்றுக்கும் அப்பாற்பட்டவற்றை வழங்கவேண்டும் என்ற அம்பேவல வர்த்தகநாமத்தின் தத்துவத்தை இப்பிரச்சாரம் அடிக்கோடிட்டுக் காட்டுகின்றது. வர்த்தகநாமத்தின் உயர்வான விழுமியங்களின் விம்பமாக அமையும் அனுபவங்களை விசுவாசம் மிக்க தனது நுகர்வோருக்கு வழங்குவதன் மூலமாக, குடும்பங்களுடனான தனது பிணைப்பினை அம்பேவல வலுப்படுத்துவதுடன், உள்நாட்டுச் சந்தையில் உண்மையான அர்த்தத்தை ஏற்படுத்தும் நுகர்வோர் ஊக்குவிப்பு எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு மீள்வரைவிலக்கணம் வகுக்கின்றது. கீல்ஸ், கார்கில்ஸ் ஃபூட் சிட்டி, க்ளோமார்க், ஆர்பிகோ, ஸ்பார், மற்றும் லாஃப்ஸ் உள்ளிட்ட நவீன வர்த்தக சுப்பர்மார்க்கெட்டுக்கள் அனைத்திலும் பிரத்தியேகமாகக் கிடைக்கப்பெறுவதுடன், தனது நுகர்வோருக்கு அர்த்தமுள்ள மதிப்பைத் தோற்றுவிப்பதற்கு எத்தகைய புத்தாக்கங்களை அம்பேவல தொடர்ந்தும் முன்னெடுத்து வருகின்றது என்பதை இந்த முயற்சி எடுத்துக்காட்டுகிறது.
இந்த சமீபத்தைய ஊக்குவிப்புப் பிரச்சாரத்துடன், பாற்பொருள் மகத்துவத்தில் இலங்கையின் தர ஒப்பீட்டு நியமம் என்ற தனது ஸ்தானத்தை அம்பேவல மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது மாத்திரமன்றி, தயாரிப்பு வழங்கும் அனுபவத்திற்கும் மேலாக, மறக்க முடியாத, உயர்வான அனுபவங்கள் மூலமாக தனது நுகர்வோரின் வாழ்வை வளப்படுத்துவதிலும் இவ்வர்த்தகநாமம் அர்ப்பணிப்புடன் உள்ளது.
