Home » பேலியகொடையில் அதி நவீன DATS கற்கை நிலையத்தின் மூலம் தொழிற்கல்வியை வலுப்படுத்தும் DIMO

பேலியகொடையில் அதி நவீன DATS கற்கை நிலையத்தின் மூலம் தொழிற்கல்வியை வலுப்படுத்தும் DIMO

by Ceylon Business
June 10, 2025 10:12 am/**/ 0 comment

இலங்கையின் முன்னணி பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரக் குழுமமான DIMO, அதன் DIMO Academy for Technical Skills (DATS) கற்கை நிலையத்தினை பேலியகொடைக்கு  இடமாற்றம் செய்துள்ளமை தொடர்பில் பெருமையுடன் அறிவிக்கின்றது. இந்நடவடிக்கையானது  உலகத்தரத்தில் போட்டித்தன்மை வாய்ந்த தொழில்நுட்ப வல்லுநர்களை இலங்கையில் உருவாக்குவதற்கும், தொழிற்கல்வியை மேம்படுத்துவதற்கும் அந்நிறுவனம் கொண்டுள்ள தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் மாற்றகரமான படியைக் குறிக்கிறது.

இப்புதிய கற்கை நிலையமானது  தொழில்துறையில் நிலவும் கேள்வி மற்றும் பயிற்சி மேன்மை ஆகியவற்றுக்கு இடையிலான இடைவெளியை நிரப்பும் முன்னோடியான தொழில்நுட்பக் கல்வியில் DATS இன் 35 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை பிரதிபலிக்கிறது. மோட்டார் வாகன மின்னணுவியல் முதல் தொழிற்சாலை பொறியியல் வரை, DATS தொழில்துறைக்குத் தயாராக இருக்கும் திறமையாளர்களை உருவாக்கியுள்ளதுடன், அதன் பட்டதாரிகளுக்கு உலகளாவிய வேலை வாய்ப்புகளைப் பெற்றுத்தந்துள்ளது. பேலியகொடைக்கான இந்த இடமாற்றத்தோடு வளர்ந்து வரும் தொழில்துறை போக்குகளுக்கு ஏற்ப எதிர்காலத்துக்கான கற்கைநெறிகளை அறிமுகப்படுத்தும் அதேவேளை, இது பயிற்சி திறனையும் மூலோபாய ரீதியாக அதிகரிக்கின்றது.

பேலியகொடைக்கான இடமாற்றம் என்பது வெறும் பௌதீக ரீதியான மாற்றத்தை மட்டுமல்லாமல், தொழிற்கல்வியை உலகளாவிய தரத்திற்கு உயர்த்துவதற்கான ஆழமான அர்ப்பணிப்பையும் குறிக்கிறது. DATS இல் ஜேர்மன் அங்கீகாரம் பெற்ற கற்கைநெறிகளை பூர்த்தி செய்வதானது சர்வதேச, குறிப்பாக ஜேர்மனியில் வேலைவாய்ப்புக்கான இணையற்ற அணுகலை வழங்குகிறது. Home Serve Germany மற்றும் MAN போன்ற பிரபல ஜேர்மன் நிறுவனங்கள், பட்டதாரிகளுக்கு உத்தரவாதமான வேலை வாய்ப்புகள் கிடைப்பதனை உறுதி செய்வதற்காக DATS உடன் கைகோர்த்துள்ளதுடன், இது வெளிநாட்டில் சிறப்பான தொழில்களைப் பெற்றுக் கொள்ளவும் வழி வகுக்கிறது. இந்த முயற்சிகள் மூலம், DATS எண்ணற்ற இளைஞர்களின் வாழ்க்கையை மாற்றியுள்ளதோடு, அவர்கள் ஒருபோதும் நினைத்துப் பார்க்காத உயரங்களை எட்டவும் உதவுகிறது.

banner

DIMOவின் நிறைவேற்று பணிப்பாளர்/ பிரதான மனித வளங்கள் அதிகாரி மற்றும் குழுமத்தின் கல்வித்துறைக்கு பொறுப்பான பணிப்பாளர் தில்ருக்‌ஷி குருகுலசூரிய, இது தொடர்பில் கருத்து தெரிவிக்கையில்தொழிற்பயிற்சியை ஊக்குவிப்பது இலங்கையில் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதற்கான மிகவும் அர்த்தமுள்ள வழிகளில் ஒன்றாகும். தேவை அடிப்படையிலான திறன்களை வளர்ப்பதன் மூலம், ஆற்றலுக்கும் வாய்ப்புக்கும் இடையிலான இடைவெளியை நிரப்ப முடியும். தொழிற்கல்வியானது இரண்டாம் தெரிவாக பார்க்கப்படக்கூடாது மாறாக, அது இலங்கை இளைஞர்கள் தங்கள் முழு திறனையும் அடைய வலுவூட்டும் உள்ளடங்கலான கல்வி முறையின் ஒருங்கிணைந்த அங்கமாக இருக்க வேண்டும்.”என்றார்.

பேலியகொடையின் கேந்திர ரீதியான அமைவிடமானது நாடு முழுவதும் உள்ள மாணவர்களுக்கான அணுகலை மேம்படுத்துவதோடு, தொழில்துறை பங்குதாரர்களுடன் ஒத்துழைப்பையும் மேம்படுத்துகின்றது. மேலும், நோக்கத்துக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ள இந்த கற்கை நிலையமானதுகடுமையான சர்வதேச தரநிலைகளைப் பின்பற்றுவதோடுஜெர்மன் வர்த்தக சபையால் பரிந்துரைக்கப்பட்டவை உள்ளிட்ட உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட TVET கொள்கைகளுக்கு இணைவானதாகும். இது பாடத்திட்டம், உட்கட்டமைப்பு மற்றும் பயிற்சி முறைகள் ஆகியன உலகத்தரம் வாய்ந்தவை என்பதனையும் உறுதி செய்கிறது.

இந்த அதிநவீன கற்கை நிலையமானது, நவீன பழுதறிதல் கருவிகள், மின்னணுவியல் தொழில்நுட்பங்கள் மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளுடன் கூடிய மேம்பட்ட ஆய்வகங்களைக் கொண்டுள்ளதுஉயர் தொழில்நுட்ப பட்டறைகளானது பாரம்பரிய நடைமுறைகளை மின்சார மற்றும் ஹைபிரிட் வாகன அமைப்புகள் போன்ற புத்தாக்க அணுகுமுறைகளுடன் கலக்கின்றதுஅத்தோடு, ஆற்றல் வாய்ந்த ஸ்மார்ட் வகுப்பறைகள்தொழிலக சூழல்களைப் பிரதிபலிக்கும் உருவகப்படுத்துதல் பகுதிகள் மற்றும் டிஜிட்டல் நூலகங்கள் ஆகியன ஒரு ஆழமான கற்றல் அனுபவத்தை வழங்குகின்றன. தனியான மாணவர் வள நிலையங்கள் கல்வி மற்றும் தொழில் வளர்ச்சியை மேலும் ஆதரிக்கின்றன.

இந்தப் புதிய காலகட்டமானது தொழிலக தன்னியக்கமாக்கல் , மின்சார வாகன தொழில்நுட்பம் மற்றும் கட்டிட சேவைகள் போன்ற அதிக கேள்வி நிலவும் பிரிவுகளுக்கான சிறப்பு கற்கை நெறிகளை அறிமுகப்படுத்த DATS-க்கு உதவுகிறதுஇவை வலுசக்தி துறையின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான குறுங்கால திறன் அபிவிருத்தி முயற்சிகள், நிறுவனங்களுக்கான பயிற்சி திட்டங்கள் மற்றும் விசேட LPG தொழில்நுட்ப வல்லுநர் பயிற்சி திட்டங்கள் போன்றவற்றையும் உள்ளடக்குகின்றன. மேலும், சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து உருவாக்கப்பட்ட தொழிற்கல்வி ஆலோசனை சேவைகளானது பாடத்திட்ட வடிவமைப்பை வளப்படுத்துவதோடு உலகளாவிய சிறந்த நடைமுறைகளை ஏற்பதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

DIMO நிறுவனமானதுஎதிர்காலத்தில் DATS கற்கை நிலையத்தை இரட்டை தொழிற்கல்வி பயிற்சிக்கான இலங்கையின் சிறந்த மையமாக நிலைநிறுத்துவதோடு, மாணவர் சேர்க்கை மற்றும் பயிற்சி திறனை விரிவுபடுத்தும் திட்டங்களையும் கொண்டுள்ளதுஇந்த கற்கை நிலையமானது பசுமை தொழில்நுட்பங்கள் மற்றும் நிலைபேறான பொறியியலுக்கான தேசிய மையமாகவும் செயல்படும். அத்தோடு, சர்வதேச பங்குடமைகளை  உருவாக்குதல், உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட சான்றிதழ்களை வழங்குதல் மற்றும் இடம்பெறும் வாய்ப்புகளை மேம்படுத்த மாணவர் பரிமாற்றத் திட்டங்களை அறிமுகப்படுத்தல் போன்ற எதிர்கால திட்டங்களையும் கொண்டுள்ளது.

You may also like

Leave a Comment

About Us

Ceylon Business is your trusted hub for news, insights, and opportunities in Sri Lanka’s vibrant business landscape. From emerging startups to established enterprises, we bring you the latest updates, market trends, and inspiring success stories that shape the future of Sri Lankan commerce.

Categories

Fevicon-White in Blue-1

All rights reserved 2025