பாற்பொருள் தயாரிப்புக்களின் மகத்துவத்தில் இலங்கையில் தரஒப்பீட்டு நியமமாகத் திகழ்ந்து வருகின்ற அம்பேவல, தனது சமீபத்தைய தயாரிப்பாக இலங்கையில் முதல் முறையாக ஃபலூடா சுவையூட்டப்பட்ட யோகட்டை அறிமுகப்படுத்தி, புத்தாக்கத்தின் தரத்தை மீண்டும் ஒரு முறை மேம்படுத்தியுள்ளது. மிகவும் நேசிக்கப்படுகின்ற, ஏங்க வைக்கும் ஃபலூடா சுவையை, அம்பேவல யோகட்டின் ஊட்டச்சத்து நலச்செழுமைமிக்க பாலுடன் சேர்த்து வழங்கும் இப்புதிய தயாரிப்பு, வாயில் சுவைக்கும் ஒவ்வொரு கரண்டியிலும் பாரம்பரியத்தையும், ஆரோக்கியத்தையும் கலந்து, ஏக்கத்தை ஏற்படுத்தி, சந்தையில் முதல்முறையாக இத்தகைய பேரார்வத்தைத் தோற்றுவிக்கிறது.
அம்பேவலக்குச் சொந்தமான பண்ணைகளிலிருந்து பெறப்படுகின்ற தூய்மையான, புத்தம்புதிய பாலைக் கொண்டு தயாரிக்கப்படுகின்ற ஃபலூடா சுவையூட்டப்பட்ட யோகட் ஆனது தரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் எள்ளளவும் குறைவின்றிய வர்த்தகநாமத்தின் அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்ற அதேசமயம், பாரம்பரிய சுவை விருப்பத்தை முற்றிலும் புதிய வழியில் சுவைத்து மகிழ்ந்து, புத்துணர்வு பெறும் அனுபத்தை நுகர்வோருக்கு வழங்குகின்றது. மென்மையான தோற்ற அமைப்பு மற்றும் செழுமையான ஃபலூடா சுவை மற்றும் நம்பிக்கையை வென்றெடுத்துள்ள அம்பேவல ஊட்டச்சத்து மேன்மை ஆகியவற்றுடன் கூடிய இப்புத்தாக்கமானது ஊட்டச்சத்தில் எவ்விதமான குறைவுமின்றி ஏக்கத்தின் சாரத்தை வசப்படுத்துகிறது. மிகவும் சௌகரியத்தை வழங்கும் வகையில் 80 கிராம் கோப்பையில் பொதியிடப்பட்டு, செல்லும் வழியிலோ, முழுமையான நொறுக்குத்தீனியாகவோ, அல்லது தினந்தோறும் மகிழ்வை அனுபவிக்கும் எளிமையான தருணத்திற்கோ மிகவும் நேர்த்தியான ஒரு தெரிவாக மாறியுள்ளது.
2009ம் ஆண்டு முதல் கெட்டியான யோகட்டிற்கு நம்பிக்கைமிக்க நாமமாகத் திகழ்ந்து வருகின்ற அம்பேவல, பரிணாம மாற்றம் கண்டு வருகின்ற நுகர்வோர் தேவைகளுக்கேற்ப பல்வகைப்பட்ட சுவை வடிவங்களுக்கு தனது தயாரிப்புக்களை விரிவுபடுத்தும் முயற்சிகளை அண்மைக்காலமாக மேற்கொண்டு வந்துள்ளது. உயர்வான பாலுணவு அனுபவங்களை வழங்குவதில் முன்னோடி என்ற தனது வகிபாகத்தை மேலும் ஆணித்தரமாக நிலைநாட்டி, இலங்கையின் உணவுப் பாரம்பரியத்தை, நவீன வாழ்க்கைமுறையுடன் மிகவும் சிறந்தனைபூர்வமாக ஒன்றிக்கச் செய்வதில் தனது ஆற்றலை ஃபலூடா சுவையூட்டப்பட்ட யோகட் அறிமுகத்தினூடாக அம்பேவல மீண்டும் வெளிக்காண்பித்துள்ளது.
இலங்கை மக்கள் யோகட்டை எவ்வாறு அருந்தி மகிழ்கின்றனர் என்பதற்கு இந்த அறிமுகத்துடன் தொடர்ந்தும் மீள்வரைவிலக்கணம் வகுத்துள்ள அம்பேவல, ஒவ்வொரு தலைமுறையையும் மகிழ்விக்கின்ற. ஆர்வமூட்டும் தெரிவுகளை அறிமுகப்படுத்தி வருகின்றது. இத்தயாரிப்பை வெறுமனே யோகட் என்று மாத்திரம் கூறி விட முடியாது, இது பாரம்பரியம், சுவை, மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் கொண்டாட்டம் என்பதுடன், பாற்பொருட்களுக்கு நாட்டில் மிகவும் நன்மதிப்பைச் சம்பாதித்துள்ள ஒரு நிறுவனத்திடமிருந்து கிடைக்கப்பெறுகின்றது என்பது சிறப்பம்சமாகும்.
ஃபலூடா சுவையூட்டப்பட்ட அம்பேவல யோகட்டை சுவைத்து மகிழ்ந்து, பாரம்பரியமும், ஆரோக்கியமும் சந்திக்கின்ற, சுவையும், புத்தாக்கமும் சந்திக்கின்ற மகத்துவத்தை அறிந்து கொள்ளுங்கள். இது அம்பேவல நிறுவனத்திடமிருந்து மாத்திரமே கிடைக்கப்பெறுகின்றது.
