Home EntertainmentHavelock City Mall தனது வாடிக்கையாளர்களுக்குப் பரிசளித்தும், தன் ஊழியர்களைக் கௌரவித்தும் மூன்றாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

Havelock City Mall தனது வாடிக்கையாளர்களுக்குப் பரிசளித்தும், தன் ஊழியர்களைக் கௌரவித்தும் மூன்றாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

by CeylonBusiness1
October 20, 2026 12:36 pm/**/ 0 comment

 Havelock City Mall (HCM), கடந்த மூன்று ஆண்டுகளில் தனது பயணத்திற்குப் பங்களித்த வாடிக்கையாளர்கள், சில்லறை விற்பனைக் கூட்டாளர்கள், வணிகக் கூட்டாளர்கள் மற்றும் ஊழியர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட “Three Is On Us” என்ற விசேட கொண்டாட்டத்துடன் தனது மூன்றாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது. 2026 ஒக்டோபர் 16 முதல் 25 வரை இடம்பெறும் இந்தக் கொண்டாட்டங்கள், வாடிக்கையாளர்களுக்கான உற்சாகமான வெகுமதிகள், சில்லறை விற்பனைச் சலுகைகள், பொழுதுபோக்கு மற்றும் கூட்டாளர்களுக்கான அங்கீகாரம் ஆகியவற்றை ஒன்றிணைத்து, இந்த வர்த்தகத்தொகுதியின் வெற்றிக்குப் பின்னால் உள்ள சமூகத்தின் மீதான அதன் நன்றியுணர்வைப் பிரதிபலிக்கும்.

2023-இல் திறக்கப்பட்டதிலிருந்து, Havelock City Mall வர்த்தகத்தொகுதி கொழும்பின் முதன்மையான வாழ்க்கைமுறை மையங்களில் ஒன்றாக வளர்ந்துள்ளது. இது முன்னணி உள்ளூர் மற்றும் சர்வதேச வர்த்தகநாமங்கள், உணவு மற்றும் பொழுதுபோக்கு ஆகியவற்றை ஒரே கூரையின் கீழ் ஒன்றிணைக்கிறது. பல ஆண்டுகளாக, இந்த வர்த்தகத்தொகுதி புதிய சில்லறை விற்பனை அனுபவங்களை அறிமுகப்படுத்தி, பல்வேறு சமூக மற்றும் வாழ்க்கைமுறை நிகழ்வுகளை நடத்தியுள்ளது. இதன் மூலம், கொள்வனவுகளுக்கு அப்பாற்பட்டு குடும்பங்களும் நண்பர்களும் ஒன்றுகூடும் இடமாகத் தன்னை நிலைநிறுத்திக் கொண்டு, தனது வர்த்தகநாம வாக்குறுதியான “எனது மகிழ்விற்கான இடம்” (My Happy Place) என்பதை உண்மையாகக் கட்டிக்காத்து வருகிறது.

இந்தப் பயணத்தை வடிவமைப்பதில் HCM-இன் சில்லறை விற்பனைக் கூட்டாளர்களும் ஊழியர்களும் ஆற்றிய முக்கியப் பங்கை ஆண்டு நிறைவு விழாக் கொண்டாட்டங்கள் அங்கீகரிக்கும். ஒரு சிறப்பு விருது வழங்கும் நிகழ்வில், பல்வேறு பிரிவுகளில் 34 விருதுகள் வழங்கி வாடகைக் கூட்டாளர்கள் கௌரவிக்கப்படுவார்கள். அதே நேரத்தில், வர்த்தகத்தொகுதியின் தொடர்ச்சியான வெற்றிக்குத் தங்கள் அர்ப்பணிப்பையும் பங்களிப்பையும் வழங்கிய ஊழியர்களும் அங்கீகரிக்கப்படுவார்கள்.

ஆண்டு நிறைவு விழாக் காலம் முழுவதும், பங்கேற்கும் வர்த்தகநாமங்கள் மத்தியில் 30% வரை பிரத்தியேக தள்ளுபடிகளையும், நேரடி இசை நிகழ்ச்சிகள் மற்றும் பொழுதுபோக்கு நிகழ்வுகளையும் வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கலாம். கொண்டாட்டங்களை மேலும் சிறப்பிக்கும் வகையில், ரூ. 10,000-க்கு பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்கள், உத்தரவாதமான பரிசுகளை வழங்கும் ஒரு சிறப்பு சுரண்டும் அட்டையைக் கொண்ட ஊக்குவிப்பில் பங்கேற்கலாம். ஒக்டோபர் 16 முதல் 25 வரை, விருந்தினர்கள் சிறப்பு கொள்வனவு வெகுமதிகளை அனுபவிக்கவும், தங்கள் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் இந்த சாதனை மைல்கல்லைக் கொண்டாடவும் வாய்ப்பளிக்கும் வகையில், ஒரு பண்டிகைச் சூழலை உருவாக்கும் விதமாக இந்த நிகழ்வுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

banner

இந்த நிகழ்வு குறித்து கருத்து தெரிவித்த Overseas Realty (Ceylon) PLC நிறுவனத்தின் குழும தலைமை நிர்வாக அதிகாரி பிரவீர் சமரசிங்க, “Havelock City Mall தனது மூன்றாம் ஆண்டு நிறைவைக் கொண்டாடும் இந்த வேளையில், நாங்கள் ஒரு சாதனை மைல்கல்லை விட மேலான ஒன்றைக் கொண்டாடுகிறோம். கடந்த மூன்று ஆண்டுகளில் எங்கள் பயணத்தை வடிவமைத்த வாடிக்கையாளர்கள், சில்லறை விற்பனைப் பங்காளர்கள், வணிகப் பங்காளர்கள் மற்றும் அர்ப்பணிப்புள்ள எமது ஊழியர் அணியை நாங்கள் கொண்டாடுகிறோம். அவர்களின் நம்பிக்கையும் தொடர்ச்சியான ஆதரவும், விருந்தினர்கள் ஒன்றுகூடி பொருட்கள் வாங்கவும், உணவருந்தவும், உறவுகளைப் பலப்படுத்தவும், நீடித்த நினைவுகளை உருவாக்கவும் ஒரு இடமாக இதை உருவாக்க எங்களுக்கு உதவியுள்ளன. ‘Three Is On Us’ என்பது, Havelock City Mall வர்த்தகத் தொகுதியைத் தங்களது மகிழ்ச்சியான இடமாக மாற்றிய அனைவருக்கும் நாங்கள் கைம்மாறு செய்வதற்கும் நன்றி சொல்வதற்குமான ஒரு வழியாகும். நாங்கள் எதிர்காலத்தை நோக்கும்போது, மேலும் அர்த்தமுள்ள அனுபவங்களை உருவாக்குவதற்கும், எங்கள் கூட்டாண்மைகளை வலுப்படுத்துவதற்கும், இலங்கையில் வாழ்க்கைமுறை சில்லறை விற்பனைக்கான தரத்தை தொடர்ந்து உயர்த்துவதற்கும் நாங்கள் உறுதியுடன் இருக்கிறோம்” என்று கூறினார்.

மூன்றாம் ஆண்டு நிறைவு விழா, வாடிக்கையாளர்கள், சில்லறை விற்பனைக் கூட்டாளர்கள் மற்றும் பரந்த சமூகத்துடன் கட்டியெழுப்பப்பட்ட உறவுகளைக் கொண்டாடும் விதமாக, Havelock City Mall வர்த்தகத் தொகுதியின் பயணத்தில் மற்றொரு முக்கிய அத்தியாயத்தைக் குறிக்கிறது. தனது நான்காவது ஆண்டில் காலடியெடுத்து வைக்கும் இவ்வேளையில், தரமான சில்லறை விற்பனைச் சலுகைகள், மறக்க முடியாத அனுபவங்கள் மற்றும் அர்த்தமுள்ள கூட்டாண்மைகள் மூலம் மக்களை ஒன்றிணைப்பதில் இந்த வர்த்தகத் தொகுதி தொடர்ந்து கவனம் செலுத்துகிறது. இதன்மூலம் Havelock City Mall வர்த்தகத் தொகுதியை அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சியான இடமாக மாற்றுவதை தனது நோக்கமாகக் கொண்டுள்ளது.

You may also like

Leave a Comment