Home Auto MobileCR & FC Premier Rugby Club இற்கு 2028 வரை உத்தியோகபூர்வ இணை அனுசரணையாளர்களாக இணையும் Sathosa Motors PLC மற்றும் Isuzu

CR & FC Premier Rugby Club இற்கு 2028 வரை உத்தியோகபூர்வ இணை அனுசரணையாளர்களாக இணையும் Sathosa Motors PLC மற்றும் Isuzu

by CeylonBusiness1
November 5, 2026 12:00 pm/**/ 0 comment

இலங்கையில் Isuzu வாகனங்களுக்கான அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Sathosa Motors PLC (SML) நிறுவனம், CR & FC Premier Rugby Club உடன் மூலோபாய அனுசரணைக்கான பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளதுடன், 2028 வரையிலான காலப்பகுதிக்கு அக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணை அனுசரணையாளராகவும் மாறியுள்ளது.

இரு நிறுவனங்களினதும் சிரேஷ்ட பிரதிநிதிகளின் முன்னிலையில் கொழும்பில் உள்ள CR & FC மைதானத்தில் இதற்கான அனுசரணை ஒப்பந்தம் உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டது. செயல்திறன், விசேடத்துவம், நீண்டகால வளர்ச்சி போன்ற இரு தரப்பிற்கும் இடையிலான பகிர்ந்தளிக்கப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒரு முக்கிய கூட்டணியின் ஆரம்பத்தை இது குறிக்கிறது.

இந்த கூட்டணியின் மூலம், Sathosa Motors PLC மற்றும் Isuzu ஆகியன, இலங்கை ரக்பி விளையாட்டில் தனது நிலையைத் தொடர்ச்சியாக வலுப்படுத்தி வரும் CR & FC கழகத்திற்கு ஆதரவை வழங்கும். இலங்கையில் விளையாட்டுகளின் வளர்ச்சியை ஆதரிப்பதற்கும், கூட்டுப் பணி, ஒழுக்கம், மனஉறுதி மற்றும் விளையாட்டுத் திறன் போன்ற அம்சங்களை ஊக்குவிப்பதற்கும் SML நிறுவனம் கொண்டுள்ள பாரிய அர்ப்பணிப்பையும் இந்த அனுசரணை பிரதிபலிக்கிறது.

CR & FC கழகம் முச்சம்பியன்களாக (Triple Champions) உருவெடுத்த 2025/26 ரக்பி பருவத்தைத் தொடர்ந்து, உற்சாகமான தருணத்தில் இந்த பங்காண்மை ஏற்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த முக்கிய சாதனையானது, இலங்கையின் முன்னணி ரக்பி நிறுவனங்களில் ஒன்றாக CR & FC இன் நிலையை மேலும் வலுப்படுத்துவதுடன், அதன் வீரர்கள், பயிற்றுநர்கள், நிர்வாகத்தின் அர்ப்பணிப்பு, மன உறுதி மற்றும் போட்டி மனப்பான்மையை நிரூபிக்கிறது.

banner

Sathosa Motors PLC மற்றும் Isuzu நிறுவனங்களைப் பொறுத்தவரையில், இந்த பங்காண்மையானது ஒரு சாதாரண விளையாட்டு அனுசரணைக்கும் அப்பாற்பட்ட ஒரு விடயத்தை பிரதிபலிக்கிறது. வலிமை, சகிப்புத்தன்மை, நம்பகத்தன்மை, கூட்டுப் பணி மற்றும் வெற்றி பெறுவதற்கான மன உறுதி போன்ற உயர் செயல்திறன் கொண்ட ரக்பி விளையாட்டை வெளிப்படுத்தும் குணங்களுடன் Isuzu வர்த்தகநாமத்தை இணைப்பதற்கான ஒரு வாய்ப்பை இது வழங்குகிறது. இந்த குணங்கள், இலங்கையில் Isuzu வர்த்தகநாமத்துடனும் அதன் இருப்பை வடிவமைத்த மதிப்புகளுடனும் ஒத்துப்போகின்றன.

பொறுப்புள்ள நிறுவனங்கள், விளையாட்டு நிறுவனங்களை ஆதரிப்பதிலும், விளையாட்டு வீரர்கள் மிக உயர்ந்த மட்டத்தில் திறமையை வெளிப்படுத்தவும், வளர்ச்சி அடையவும் வாய்ப்புகளை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகிக்க வேண்டுமென Sathosa Motors PLC நிறுவனம் எதிர்பார்க்கிறது. CR & FC உடனான தனது தொடர்பினூடாக, நாட்டின் விளையாட்டுச் சூழலை வலுப்படுத்துவதற்கு பங்களிக்கும் அதே வேளையில், வாடிக்கையாளர்கள், விளையாட்டுச் சமூகங்கள் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள ரக்பி இரசிகர்களுடன் நெருங்கிய தொடர்புகளை கட்டியெழுப்ப நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.

இந்த கூட்டாண்மை மூலம், அனுசரணை காலப்பகுதியில் இரு அமைப்புகளுக்கும் இடையே கூட்டாக பல்வேறு முயற்சிகள் மற்றும் ஈடுபாட்டுடனான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான ஒரு வலுவான தளத்தை வழங்குமெனவும், CR & FC, Sathosa Motors PLC மற்றும் Isuzu வர்த்தகநாமங்களின் வெளிப்படுத்தலை மேலும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

பெருமைமிக்க வரலாற்றையும், இலங்கை ரக்பி விளையாட்டில் வலுவான ஆதரவாளர்களையும் கொண்டுள்ள CR & FC கழகமானது, போட்டித்தன்மைமிக்க ரக்பி மற்றும் விளையாட்டுத் திறமைகளை உருவாக்குவதில் தொடர்ச்சியாக முக்கிய பங்கு வகித்து வருகிறது. கழகம் அண்மையில் அடைந்த வெற்றியானது, உறுதியான பெருநிறவன பங்காளர்களின் ஆதரவுடன் இணைந்து, எதிர்வரும் பருவங்களில் அதன் இலட்சியங்களுக்கு மேலும் வேகத்தை வழங்குமெனெ  எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அனுசரணை ஒப்பந்தமானது, 2028 வரை அமுலில் இருக்கும் என்பதோடு, விசேடத்துவம், செயல்திறன், கூட்டுப் பணி மற்றும் சமூக ஈடுபாடு ஆகிய இரு தரப்பினருக்கும் இடையிலான பகிர்ந்தளிக்கப்பட்ட மதிப்புகளின் அடிப்படையில் அமைந்த, பரஸ்பரம் நன்மை பயக்கும் நீண்டகால உறவின் ஆரம்பத்தை காட்டுகிறது.

இந்த கூட்டணியின் மூலம், Sathosa Motors PLC, Isuzu மற்றும் CR & FC ஆகியன தத்தமது பலத்தை மேலும் கட்டியெழுப்பவும், இலங்கை ரக்பி விளையாட்டின் ஒரு உற்சாகமான புதிய அத்தியாயத்திற்கு பங்களிக்கவும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றன.

 

You may also like

Leave a Comment