Home » 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ குளிர்பான பங்காளராக Coca-Cola

2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தின் உத்தியோகபூர்வ குளிர்பான பங்காளராக Coca-Cola

by CeylonBusiness1
October 3, 2025 3:50 pm/**/ 0 comment

இலங்கையில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல, அது மக்களின் உணர்வுகளைத் தட்டியெழுப்பும் ஒரு மகத்தான கொண்டாட்டமாகும். அந்த உணர்வை இன்னும் சிறப்பாக்கும் வகையில், சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ஐசிசி) பெருமைக்குரிய உலகளாவிய பங்காளியான Coca-Cola, 2025 செப்டம்பர் 30ஆம் திகதி முதல் நவம்பர் 2ஆம் திகதி வரை இந்தியாவும், இலங்கையும் இணைந்து நடத்தும் ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரின் “உத்தியோகபூர்வ குளிர்பான பங்காளர்” என்ற முறையில் தனது அனுசரணையை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறது.

இம்முறை மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் இலங்கை அணி 7 போட்டிகளில் விளையாடவுள்ள நிலையில், இதில் 5 போட்டிகள் கொழும்பு ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறவுள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதன்படி, அவுஸ்திரேலியாவை ஒக்டோபர் 4ஆம் திகதியும், இங்கிலாந்தை ஒக்டோபர் 11ஆம் திகதியும், நியூசிலாந்தை ஒக்டோபர் 14ஆம் திகதியும், தென்னாப்பிரிக்காவை ஒக்டோபர் 17ஆம் திகதியும், பாகிஸ்தானை ஒக்டோபர் 24ஆம் திகதியும் இலங்கை அணி சந்திக்கவுள்ளது. உலகின் தலைசிறந்த பெண் கிரிக்கெட் வீராங்கனைகள் இலங்கை மண்ணில் விளையாடுவது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் மறக்க முடியாத தருணமாக அமையவுள்ளது.

Coca-Cola நிறுவனத்தின் இலங்கை கிரிக்கெட்டுடனான உறவு வெறும் புத்துணர்ச்சியைத் தாண்டி, மக்களை ஒன்றிணைக்கும் பாலமாக இருந்து வருகிறது. நமது நாட்டின் பப்பரே இசையையும், இலங்கையர்களின் உணர்வுகளையும் பிரதிபலிக்கும் விளம்பரங்கள் முதல், நாடு முழுவதும் கிரிக்கெட் மகிழ்ச்சியைப் பரப்பும் அடிமட்ட திட்டங்கள் வரை, Coca-Cola எப்போதும் ரசிகர்கள், வீரர்கள் மற்றும் விளையாட்டின் உண்மையான உணர்வுக்கு துணையாக இருந்துள்ளது.

banner

தற்போது மகளிர் கிரிக்கெட் முன்னணி விளையாட்டாக உருவெடுத்திருக்கும் நிலையில், 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத்தில் வெளிப்படுத்தப்படும் திறமைகளையும், உறுதியான மனப்பான்மையையும், உலகிற்கு அளிக்கும் ஊக்கத்தையும் கொண்டாடுவதில் Coca-Cola மகிழ்ச்சியும் பெருமையும் அடைகிறது.

இதுதொடர்பில் Coca-Cola நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைதீவுகளின் தலைவர் மரியோ பெரேரா கருத்து தெரிவிக்கையில், “உலக நாடுகளை வரவேற்க இலங்கை தயாராகும் வேளையில், இம்முறை ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கிண்ணத் தொடரை நமது மக்களின், நமது பாரம்பரியத்தின், மற்றும் கிரிக்கெட் மீதான நமது பற்றின் உண்மையான கொண்டாட்டமாக மாற்ற Coca-Cola உறுதி பூண்டுள்ளது. கிரிக்கெட்டில் சாதிக்க கனவு காணும் ஒவ்வொரு சிறுமியும், ஒவ்வொரு குடும்பமும், அயலவரும் இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தின் ஒரு பகுதியாக உணர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்” என தெரிவித்தார்.

பப்பரே மேளங்கள் மைதானங்களிலும், வீடுகளிலும் எதிரொலிக்கத் தயாராக உள்ள நிலையில், Coca-Cola அனைத்து ரசிகர்களையும் ஒரு Coke ஐ உயர்த்தி, உற்சாகமாக ஆரவாரித்து, கிரிக்கெட் கொண்டுவரும் ஒற்றுமையைக் கொண்டாட அழைக்கிறது. ஏனெனில், இலங்கையில் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டல்ல, அது வாழ்வின் ஒரு அங்கமாகும்.

You may also like

Leave a Comment

About Us

Ceylon Business is your trusted hub for news, insights, and opportunities in Sri Lanka’s vibrant business landscape. From emerging startups to established enterprises, we bring you the latest updates, market trends, and inspiring success stories that shape the future of Sri Lankan commerce.

Categories

Fevicon-White in Blue-1

All rights reserved 2025