இலங்கையில் மிகவும் நன்மதிப்பைச் சம்பாதித்துள்ள மற்றும் பழமைவாய்ந்த வர்த்தகநாமங்களில் ஒன்றாகத் திகழ்ந்துவருகின்ற மலிபன், இடம்பெற்றுவரும் ஆசிய ரக்பி எமிரேட்ஸ் ஆண்களுக்கான சுற்றுப்போட்டிக்காக, இலங்கை தேசிய ரக்பி அணியின் பிளாட்டினம் அனுசரணையாளராகச் செயல்படுகின்றமை குறித்து உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை ரக்பி அணியின் வளர்ச்சியின் மீது மலிபன் கொண்டுள்ள நீண்டகால அடிப்படையிலான அர்ப்பணிப்பு மற்றும் சர்வதேச அரங்கில் விளையாட்டில் எமது தேசம் சிறப்பாக தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்கு உயர்வடையச் செய்வதில் அதன் பரந்த குறிக்கோள் ஆகியவற்றை இந்த அனுசரணை மேலும் வலுப்படுத்தியுள்ளது.
“Asia Rugby World Cup Qualifiers powered by Maliban” என்ற தலைப்பில் இந்த ஆண்டு போட்டி இடம்பெறுவதுடன், மூன்று முக்கியமான போட்டிகளில் ஆசியாவில் உச்ச ரக்பி அணிகளைக் கொண்டுள்ள நாடுகளுக்கு எதிராக இலங்கை போட்டியிடுகிறது. அந்த வகையில், கொரியாவுக்கு எதிராக ஜுன் 13 அன்று கொழும்பில் இடம்பெற்ற போட்டியுடன் இது ஆரம்பித்துள்ளதுடன், ஜுன் 22 ஹொங்கொங் அணிக்கு எதிரான போட்டி அந்த நாட்டிலும், ஜுலை 4 அன்று ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு எதிரான போட்டி மீண்டும் இலங்கையிலும் இடம்பெறவுள்ளன.
ரக்பி குறித்து மலிபன் காண்பிக்கும் ஈடுபாடு சமீபத்தைய ஆண்டுகளில் சீராக வளர்ச்சி கண்டுள்ளதுடன், இந்த ஆண்டு மே மாதத்தில் நியூசிலாந்தின் 85 கிலோ எடைக்கு உட்பட்ட ரக்பி அணி இலங்கைக்கு மேற்கொண்டிருந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சுற்றுலாவிற்கு அது பிரதான அனுசரணையை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. சர்வதேசத்தின் கவனத்தை இலங்கை ரக்பி மீது ஈர்ப்பதற்கு இம்முயற்சி உதவியுள்ளதுடன், உள்ளூர் சமூகங்கள் மற்றும் பாடசாலைகள் மத்தியில் இவ்விளையாட்டின் மீதான ஆர்வத்தையும் மீண்டும் புதுப்பிக்கச் செய்துள்ளது. இவ்விளையாட்டுடன் அடிமட்டத்திலும் மற்றும் உச்ச மட்டங்களிலும் காண்பிக்கும் மூலோபாய ஈடுபாட்டின் மூலமாக, நாட்டில் விளையாட்டின் வளர்ச்சிக்கான வழிகாட்டியாக மலிபன் தன்னை நிலைநிறுத்தியுள்ளது.
மலிபன் மற்றும் இலங்கை ரக்பி ஆகியவற்றுக்கு இடையிலான மூலோபாய கூட்டணி, வர்த்தகநாம ஊக்குவிப்பு என்பதற்கும் அப்பாற்பட்டது. நாட்டில் விளையாட்டு உட்கட்டமைப்பை வலுப்படுத்தி, ரக்பி வெறுமனே மேல் வர்க்கத்தினர் மத்தியில் ஆடப்படுகின்ற மற்றுமொரு விளையாட்டு என்று அல்லாமல், உத்வேகத்தின் மூலமாகவும், எதிர்காலத் தலைமுறைகளுக்கான வாய்ப்பாகவும் அது மாறவேண்டும் என்பதை உறுதி செய்வதில் பகிரப்பட்ட இலட்சியத்தை இது பிரதிநிதித்துவம் செய்கின்றது.
சர்வதே அரங்கில் போட்டியிடுவதற்கு இலங்கை தன்னை தயார்படுத்திக் கொண்டுள்ள நிலையில், நாட்டில் விளையாட்டுக்களுக்கு நிலைபேணத்தக்க எதிர்காலமொன்றைக் கட்டியெழுப்புவதில் வர்த்தக கூட்டாண்மைகளின் முக்கியத்துவத்தை மலிபனின் ஆதரவு எமக்கு அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
