Home » “Iconic Woman 2025” என கெளரவிக்கப்பட்ட சுதேசி நிறுவனத் தலைவி அமரி விஜேவர்தன

“Iconic Woman 2025” என கெளரவிக்கப்பட்ட சுதேசி நிறுவனத் தலைவி அமரி விஜேவர்தன

by CeylonBusiness1
September 25, 2025 1:17 pm/**/ 0 comment

சுதேசி இண்டஸ்ட்ரியல் வோர்க்ஸ் பிஎல்சி நிறுவனத் தலைவியான திருமதி அமரி விஜேவர்தன, Top C Magazine ஏற்பாடு செய்த நிகழ்வில் “Iconic Woman 2025” எனும் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளார். SLBC நிறுவப்பட்டு 100 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு இடம்பெற்ற இந்நிகழ்வில் இக்கௌரவத்தை பெற்றமை தொடர்பில் சுதேசி நிறுவனம் பெருமையுடன் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது. பெண்களை வலுப்படுத்துவதிலும், இலங்கையின் பாரம்பரியத்தை பாதுகாக்கவும், நெறிமுறையான வணிக நடைமுறைகளின் மூலம் நிலைபேறான வளர்ச்சியை ஏற்படுத்தவும் அவர் வெளிப்படுத்திய தலைமைத்துவம், தூரநோக்கு மற்றும் அர்ப்பணிப்பு ஆகியன இந்த விசேட கௌரவத்தின் மூலம் பாராட்டப்பட்டுள்ளது.

இந்த கெளரவிப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட சுதேசி நிறுவனத்தின் பிரதித் தலைவரும் அதன் முகாமைத்துவ பணிப்பாளருமான திருமதி சுலோதரா சமரசிங்க, “எமது தலைவி சுதேசியை வழிநடத்தும் வலிமையையும் தூரநோக்கம் கொண்ட வழிகாட்டும் கலங்கரை விளக்காகவும் திகழ்கின்றார். அவரின் தலைமைத்துவத்தின் கீழ் நாம் எமது தயாரிப்பு வகைகளை விரிவுபடுத்தி, புதிய சந்தைகளில் நுழைந்து, தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்யாமல் புத்தாக்கங்களை முன்னெடுத்துள்ளோம். விலங்குகள் கொடுமைப்படுத்தப்படாத, தாவர அடிப்படையிலான, சுற்றுச்சூழல் நட்பு செயன்முறை கொண்ட எமது தயாரிப்பின் உறுதிப்பாட்டை அவர் வலுப்படுத்தியுள்ளார். சுதேசி தயாரிப்புகள் பிரிட்டனின் Vegetarian Society இனால் அங்கீகரிக்கப்பட்டுள்ளமையானது, நுகர்வோர் சுற்றுச்சூழல் நட்புமிக்க மற்றும் நெறிமுறை ரீதியான தெரிவுகளை மேற்கொள்ள உதவுகின்ற எமது முன்னோக்குமிக்க சிந்தனைக்கான ஒரு சான்றாகும். அவரின் பயணமானது, பெண் தலைமைத்துவத்திற்கு ஒரு முன்மாதிரியாக அவரை நிலைநிறுத்துகிறது. அத்துடன், அவர் சாதித்தவை, பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றி, நிலைபேறான மற்றும் நெறிமுறையான அழகை மேம்படுத்துவதில் தொடர்ச்சியாக செயற்படுகின்ற ஒரு நிறுவனமாக சுதேசியை முன்னெடுத்துச் செல்ல எம்மை ஊக்குவிக்கின்றது.” என்றார்.

முழுமையாக இலங்கை நிறுவனமாக திகழும் சுதேசி, நாட்டின் பாரம்பரியங்களையும் கலாசாரத்தையும் காக்கவும் அதனை மேலும் மேம்படுத்தவுமான தனது பொறுப்பை தொடர்ச்சியாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் நாடு முழுவதிலுமுள்ள புனிதத் தலங்களுக்கு ஒளியூட்டும் ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’ போன்ற முயற்சிகளை திருமதி விஜேவர்தன முன்னெடுத்து வருவதன் மூலம், தேசிய பாரம்பரியத்தை பாதுகாப்பதன் முக்கியத்துவத்தை இளம் தலைமுறைக்கு எடுத்துக் கூறுவதோடு, ஐக்கியத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தி வருகின்றார்.

திருமதி அமரி விஜேவர்தனவின் வழிகாட்டலின் கீழ், புத்தரின் புனித தந்தம் வைக்கப்பட்டிருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தம்பதெனிய ரஜ மஹா விஹாரையில் புராதன சுவரோவியங்கள் 2013ஆம் ஆண்டு புனரமைக்கப்பட்டு, இப்புனித தலத்தின் தொன்மையான மகத்துவத்துவம் மீள கொண்டுவரப்பட்டது. இவ்வாறான முயற்சிகள் மூலம், பாரம்பரியங்களை பாதுகாப்பதில் சுதேசியின் உறுதிப்பாடு தொடர்ச்சியாக வெளிப்படுத்தப்படுவதோடு, கலாசார பெருமையை வலுப்படுத்தி, சமூகங்களையும் மேம்படுத்துகிறது.

banner

தனது முன்னணி ‘கொஹொம்ப’ வர்த்தகநாமத்தின் மூலம், சமூகத்தை மையப்படுத்திய பல்வேறு திட்டங்களை சுதேசி முன்னெடுத்து வருகிறது. இவற்றில் நாடு முழுவதுமுள்ள விகாரைகளை ஒளியூட்டும் வருடாந்த ‘சுதேசி கொஹொம்ப ஆலோக பூஜா சத்காரய’, வேம்பு மர நடுகை முயற்சியான ‘சுதேசி கொஹொம்ப மிஹிந்தலா சத்காரய’, இலங்கையின் வரட்சியான பகுதிகளில் உள்ள சமூகங்களுக்கும், பாடசாலைகள், விகாரைகளுக்கு நீர்த் தொட்டிகளை நன்கொடையாக வழங்கும் ‘சுதேசி கொஹொம்ப பிரஜா சத்காரய’, மற்றும் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொஹொம்ப பேபி பராமரிப்பு பொருட்களை வழங்கும் ‘சுதேசி கொஹொம்ப பேபி மாத்ரு சத்காரய’ ஆகியன உள்ளடங்குகின்றன. இத்திட்டங்கள் யாவும், நிலைபேறான, கலாசார மதிப்புகள் கொண்ட மற்றும் நாட்டைக் கட்டியெழுப்பும் பணி ஆகியவற்றில் நிறுவனம் கொண்டுள்ள ஆழமான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதோடு, நாடெங்கிலுமுள்ள சமூகங்களின் வாழ்வாதாரத்தின் தரத்தையும் மேம்படுத்துகின்றன.

1941ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட Swadeshi Industrial Works PLC நிறுவனம், இலங்கையில் மூலிகைகளை அடிப்படையாகக் கொண்ட, தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னோடியானதும் சந்தையில் முன்னணியில் திகழும் நிறுவனமாக திகழ்கிறது. அதன் 80 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடனும் புத்தாக்கங்களுடனும், சுதேசி இத்தொழில்துறையில் பல்வேறு ‘முதலாவது’ விடயங்களை அறிமுகப்படுத்தி, தரத்தில் ஒருபோதும் சமரசம் செய்யாத தயாரிப்புகளை வழங்கி வருகிறது.

நம்பிக்கையுடன் பயன்படுத்தப்படும் சுதேசி கொஹொம்ப, ராணி சந்தனம், சுதேசி கொஹொம்ப பேபி, பேர்ல்வைட், லக் பார், சேஃப்ப்ளஸ், பிளக் ஈகிள் பேர்ஃப்யூம், கொஹொம்ப ஹேண்ட் வொஷ், கொஹொம்ப பொடி வொஷ், ராணி ஷவர் கிரீம் வரிசைகள் போன்றன நிறுவனத்தின் பரந்துபட்ட தயாரிப்பு வகைகளில் உள்ளடங்குகின்றன. அனைத்து தயாரிப்புகளும் இலங்கையின் சுகாதார அமைச்சின் கீழுள்ள தேசிய ஔடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) கீழ் பதிவு செய்யப்பட்டவையாகும். அத்துடன் அதன் அனைத்து தயாரிப்புகளிலும் பயன்படுத்தப்படும் வாசனைத் திரவியங்களும் உலகளாவிய ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சர்வதேச வாசனை சங்கத்தினால் (IFRA) சான்றளிக்கப்பட்டுள்ளன. நிறுவனத்தின் உற்பத்திகள் யாவும் ISO 9001:2015 தரநிலைகளின் கீழ் தயாரிக்கப்படுகின்றன.

இலங்கையின் முன்னணி மூலிகை தனிநபர் பராமரிப்பு நிறுவனமாகத் திகழும் சுதேசி, இலங்கையின் சிறந்த மூலிகைகளைக் கொண்டு அதன் தயாரிப்புகளை தயாரிப்பதோடு, ஆராய்ச்சிகளை மேற்கொண்டு, மேம்படுத்தல்களை முன்னெடுத்து, உற்பத்திகளை வழங்குவதில் தொடர்ச்சியான அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது. ஒவ்வொரு தயாரிப்பும் முழுமையான சோதனைகளுக்கு உட்டுபத்தப்பட்டு, சூழல் நட்பு கொண்ட, பூமி மற்றும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு உருவாக்கப்படுகின்றன.

திருமதி அமரி விஜேவர்தன தனது தூரநோக்கு கொண்ட தலைமைத்துவத்தின் மூலம், சுதேசி கொண்டுள்ள விசேடத்துவம் மேம்படுத்தப்பட்டு, இலங்கை பாரம்பரியத்தில் ஆழமாக வேரூன்றி, எதிர்காலத்திற்கான, நிலைபேறான அழகை உருவாக்குவதில் தொடர்ந்தும் செயற்படும் என்பதை நிறுவனம் உறுதிப்படுத்துகிறது.

You may also like

Leave a Comment

About Us

Ceylon Business is your trusted hub for news, insights, and opportunities in Sri Lanka’s vibrant business landscape. From emerging startups to established enterprises, we bring you the latest updates, market trends, and inspiring success stories that shape the future of Sri Lankan commerce.

Categories

Fevicon-White in Blue-1

All rights reserved 2025