Home » CNCI மற்றும் கைத்தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சு வழங்கும் CNCI தங்க மற்றும் சாதனையாளர் 2025 விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

CNCI மற்றும் கைத்தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சு வழங்கும் CNCI தங்க மற்றும் சாதனையாளர் 2025 விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

by CeylonBusiness1
October 29, 2025 9:32 am/**/ 0 comment

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத் கைத்தொழில்துறை சம்மேளனம் (CNCI) ஏற்பாடு செய்த CNCI சாதனையாளர் விருதுகள் 2025 (CNCI Achiever Awards 2025) இல், ஹலால் சான்றுறுதிப் பேரவை (Halal Assessment Council (Guarantee) Limited – HAC), தொழில்சார் விசேடத்துவத்திற்கான தங்கம் மற்றும் உயர் சாதனையாளர் விருதுகளை வெற்றி கொண்டது.

இலங்கையின் வளர்ந்து வரும் கைத்தொழில் மற்றும் சேவை துறைகளுக்கு இவ்வமைப்பு வழங்கி வருகின்ற சிறந்த செயல்திறன், புத்தாக்கம் பங்களிப்பிற்காக, (National Level – Service Sector, Small Category) HAC தங்க மற்றும் உயர் சாதனையாளர் (Small & Micro Category) விருதுகளை வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை 24ஆவது ஆண்டாக இடம்பெற்ற CNCI சாதனையாளர் விருதுகள் நிகழ்வானது, உற்பத்தி மற்றும் சேவைகள் துறை முழுவதும் உற்பத்தித்திறன், தரம் மற்றும் நிலைபேறான வளர்ச்சியில் விசேடத்துவத்தை வெளிப்படுத்தும் இலங்கை வணிக அமைப்புகளைக் கௌரவித்தது.

HAC அமைப்பின் பணிப்பாளரும் அதன் பிரதம நிறைவேற்று அதிகாரியமான ஆகிப் ஏ. வஹாப் இது குறித்து தெரிவிக்கையில், “இந்த அங்கீகாரமானது எமது குழுவின் ஒவ்வொரு செயற்பாட்டிலும், தரம் மற்றும் நேர்மையைப் பேணுவதற்கான உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. நம்பகமான ஹலால் சான்றிதழ் மூலம், இலங்கை உற்பத்தியாளர்கள் உள்நாட்டிலும் உலகளாவிய ரீதியிலும் நுகர்வோர் நம்பிக்கையை உருவாக்கவும், பரந்த சந்தைகளுக்கான வாய்ப்பை அணுகவும் நாம் உதவுகிறோம்.” என்றார்.

banner

இந்நிகழ்வில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க, CNCI தலைவர் பிரதீப் கஹவலகே ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய தொழில்துறை முன்னேற்றத்திற்காக சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் ஆக்கபூர்வமான பங்களிப்பை அவர்கள் இங்கு பாராட்டினர்.

HAC இற்கு கிடைத்த அங்கீகாரமானது, இலங்கையில் நம்பகமான ஹலால் சான்றிதழை மேம்படுத்துவதிலும், உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவளிப்பதிலும், உணவு மற்றும் பானத் தொழில்துறையில் ஏற்றுமதித் தயார்நிலையை உருவாக்குவதிலும், இந்த அமைப்பின் வளர்ந்து வரும் பங்களிப்பை எடுத்துக் காட்டுகிறது.

You may also like

Leave a Comment

About Us

Ceylon Business is your trusted hub for news, insights, and opportunities in Sri Lanka’s vibrant business landscape. From emerging startups to established enterprises, we bring you the latest updates, market trends, and inspiring success stories that shape the future of Sri Lankan commerce.

Categories

Fevicon-White in Blue-1

All rights reserved 2025