இலங்கையின் மெத்தைகள் துறையில் முன்னோடியாகத் திகழும் ஆர்பிகோ, தனது ஆர்பிகோ மெட்ரஸ் சாதனையாளர் இரவு 2025 விருதுகள் வழங்கும் நிகழ்வை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. உள்நாட்டு தொழில்முயற்சியாளர்கள், வியாபாரங்கள் மற்றும் கம்பனி ஊழியர்களுடன் சிறந்த பகிரப்பட்ட சாதனைகளை கொண்டாடும் வகையில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டிருந்தது.
Foam பிரிவில் ஆர்பிகோ நிகழ்வு நாட்காட்டியில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாக அமைந்திருப்பதுடன், விற்பனையில் சிறந்த சாதனைகளை பதிவு செய்திருந்தமைக்காக வெகுமதிகளை வழங்கும் வகையில் நிகழ்வு அமைந்திருந்தது. Cinnamon Life at City of Dreams இல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வின் போது, 150 விற்பனை பங்காளர்களின் சாதனைமிகுந்த பங்களிப்புகள் கௌரவிக்கப்பட்டிருந்தன. அவர்களுக்கு பிளாட்டினம், தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டிருந்தன. தத்தமது பிரதேசங்களில் சிறந்த விற்பனை மற்றும் வருமான உருவாக்கத்தை எய்தி சாதனை படைத்திருந்தவர்களுக்கு நிறுவனத்தினால் கௌரவிப்புகள் வழங்கப்பட்டிருந்தன. வாடிக்கையாளர் சேவையில் சிறப்பும் இந்த விருதுகள் வழங்கலின் போது கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மேலும், இந்த ஆண்டின் நிகழ்வில், விருதுகள் வழங்கலுக்கு மேலதிகமாக, அனுசரணையுடனான வெளிநாட்டு சுற்றுப் பயணங்களும் அடங்கியிருந்தன. வெண்கல பிரிவில் வெற்றியாளர்களுக்கு மலேசியா அல்லது பாங்கொக் சுற்றுப் பயண வாய்ப்பு வழங்கப்பட்டிருந்தது. அதுபோல, வெள்ளி பிரிவில் விற்பனை சாதனையாளர்களுக்கு, பாங்கொக், பத்தாயா மற்றும் துபாய் போன்ற நகரங்களுக்கான சுற்றுப் பயணங்கள் வழங்கப்பட்டன. தங்கப் பிரிவில் சாதனையாளர்களுக்கான சுற்றுப் பயணத்தில் பிலிப்பைன்ஸ் அடங்கியிருந்ததுடன், பிளாட்டினம் பிரிவில் ஒஸ்ரியா, ஹங்கேரி மற்றும் துபாய் ஆகியன அடங்கியிருந்தன.

ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி Foam பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் லலித் விஜேசிங்க ஆர்பிகோ மெட்ரஸ் சாதனையாளர் இரவு 2025 நி்கழ்வின் ஆரம்ப உரையை ஆற்றுகிறார்.
ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி பணிப்பாளர் விவிலி பெரேரா இந்த விருதுகள் வழங்கல் தொடர்பில் கருத்துத் தெரிவிக்கையில், “எமது பிரிவுகள் தொடர்ந்தும் விரிவாக்கமடைந்து வரும் நிலையில், எமது பங்காண்மைகள் மற்றும் இணைந்து செயலாற்றுவோர் வழங்கும் முக்கிய பங்களிப்பை கௌரவிக்க தீர்மானித்தோம். வாடிக்கையாளர்கள் தயாரிப்புகளுக்கு மேம்படுத்தப்பட்ட அணுகலைப் பெறுவதை அவர்கள் உறுதி செய்யும் நிலையில், பரந்தளவு வாடிக்கையாளர்களுக்கு எமது தயாரிப்புகளை விநியோகிப்பதில் அவர்களின் முக்கிய பங்களிப்பை கொண்டாடுவதற்கு நாம் முன்வந்தோம். இந்த விருதுகளினூடாக அவர்களின் தொடர்ச்சியான நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பை கௌரவிப்பது மட்டுமன்றி, எமது பங்காண்மைகளை எந்தளவு மதிக்கிறோம் என்பதை மீள உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.” என்றார்.
உள்நாட்டு தொழிற்துறையில் தனித்துவமான முன்னோடியான செயற்பாட்டாளர் எனும் நிறுவனத்தின் நிலையை மீள உறுதி செய்யும் வகையில் ஆர்பிகோ மெட்ரஸ் சாதனையாளர் இரவு அமைந்திருந்ததுடன், 2025 ஆம் ஆண்டில் பல சாதனைகளை ஈர்க்கும் வகையிலும் அமைந்துள்ளது. இந்த ஆண்டில் ஆர்பிகோவின் பயணத்தில் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கற்களில், Englander International இன் அறிமுகம் அடங்கியுள்ளது. அமெரிக்காவின் புகழ்பெற்ற மெத்தை தொழில்னுட்பம் இலங்கையில் அறிமுகம் செய்யப்பட்டது. அத்துடன், Arpico NextGen அடுத்த தலைமுறை air cooling pocket தொழில்னுட்பத்தினுடனான மெத்தைகள் உள்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டமையும் அடங்கியுள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச தயாரிப்புகளை உள்நாட்டில் விநியோகிப்பதில் ஆர்பிகோ காண்பிக்கும் அர்ப்பணிப்பு இந்த சாதனைகளினூடாக வெளிப்பட்டுள்ளன.

ஒன்றுகூடியிருப்பவர்கள் மத்தியில் ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சி பணிப்பாளர் விவிலி பெரேரா உரையாற்றுகிறார்.
ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் Foam பிரிவின் முகாமைத்துவ பணிப்பாளர் லலித் விஜேசிங்க மேலும் கருத்துத் தெரிவிக்கையில், “எமது ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியின் தவிசாளர், முகாமைத்துவ பணிப்பாளர் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரி கலாநிதி. சேன யத்தெஹிகே அவர்களின் வழிகாட்டலில், தொழிற்துறையினுள் காணப்படும் புதிய வாய்ப்புகளை மூலோபாய ரீதியில் அணுகும் வகையில் உறுதியான அடித்தளத்தை நாம் ஏற்படுத்தியுள்ளோம். எமது தொலைநோக்குடைய தலைவர் எமது முன்னேற்றத்தை வழிநடத்திச் செல்கையில், தொழில்னுட்ப புத்தாக்கத்தில் பிந்திய முன்னேற்றங்களை நாம் பின்பற்றி, எமது தயாரிப்புகளை நவீன மயப்படுத்தி விரிவாக்கம் செய்வதிலும் கவனம் செலுத்துவோம்.” என்றார்.
பொலியுர்தீன் ஃபோம் மற்றும் ஸ்பிரிங் மெத்தைகள், ஷீட்கள், குஷன்கள் மற்றும் சிலிக்கன் ஃபைபர் தலையணைகள் உற்பத்தியில் முன்னோடியாகத் திகழும் ஆர்பிடெக் (பிரைவட்) லிமிடெட், பல தசாப்த கால கூட்டாண்மை அனுபவத்தை தன்வசம் கொண்டுள்ளது. பெருமைக்குரிய ISO 9001-2015 நியமத்தை பெற்றுள்ளதுடன், தனது புகழ்பெற்ற ஆர்பிபோமுக்காக SLS நியமத்தை ஆர்பிகோ பின்பற்றுகின்றது. நம்பிக்கையை வென்ற நாமமாக ஆர்பிடெக் (பிரைவட்) லிமிடெட் திகழ்வதுடன், தனது தற்போதைய தாய் நிறுவனமான ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி பிஎல்சியிடமிருந்து ஒன்பது தசாப்த கால வரலாற்றைக் கொண்டுள்ளது. 1932 ஆம் ஆண்டு எரிபொருள் நிரப்பு நிலையத்துடன் தனது செயற்பாடுகளை ஆரம்பித்த ரிச்சர்ட் பீரிஸ் அன்ட் கம்பனி, தொடர்ச்சியாக பெருமளவு வளர்ச்சியைப் பதிவு செய்து, இலங்கையின் சிறந்த பன்முகப்படுத்தப்பட்ட வியாபாரங்களில் ஒன்றாக திகழ்கிறது. விற்பனை, பெருந்தோட்டங்கள், இறப்பர், தளபாடங்கள், டயர்கள், பிளாஸ்ரிக், காப்புறுதி, பங்கு முகவராண்மை, நிதிச் சேவைகள் மற்றும் சரக்குக் கையாளல் போன்ற துறைகளில் ஈடுபாட்டைக் கொண்டுள்ளது. பெருமளவு வருடாந்த புரள்வைப் பதிவு செய்து, கொழும்பு பங்குப்பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்டுள்ள மாபெரும் நிறுவனங்களில் ஒன்றாக திகழ்கிறது.
