Home Healthcareஅபர்டீன் குழுமத்தின் பரக்கா, ‘Deliciously Smart’ கம்மீஸை இலங்கையில் அறிமுகப்படுத்துகின்றது

அபர்டீன் குழுமத்தின் பரக்கா, ‘Deliciously Smart’ கம்மீஸை இலங்கையில் அறிமுகப்படுத்துகின்றது

by CeylonBusiness1
October 22, 2026 4:30 pm/**/ 0 comment

அபர்டீன் ஹோல்டிங்ஸ் (Aberdeen Holdings) நிறுவனத்தின் கீழ் இயங்கும் நம்பிக்கைக்குரிய ஆரோக்கிய நலன் சார்ந்த வர்த்தகநாமமான பரக்கா (Baraka), அன்றாட ஆரோக்கியப் பராமரிப்பை மேலும் எளிமையானதாகவும் வசதியானதாகவும் மகிழ்ச்சிகரமானதாகவும் மாற்றும் நோக்குடன், ‘பரக்கா கம்மீஸ்’ (Baraka Gummies) எனும் புதிய செயற்பாட்டு கம்மி (Functional Gummy) உற்பத்தி வரிசையை அறிமுகப்படுத்தியுள்ளது. கருஞ்சீரக எண்ணெய் (Black Seed Oil), அஸ்வகந்தா (Ashwagandha) மற்றும் அப்பிள் சைடர் வினாகிரி (Apple Cider Vinegar) கம்மீஸ் வகைகளை உள்ளடக்கிய இப்புதிய உற்பத்தி வரிசை, பரிச்சயமான ஆரோக்கிய நலன் சார்ந்த மூலப்பொருட்களை இன்றைய வாழ்க்கை முறைக்கு ஏற்ற நவீன வடிவில் வழங்குகின்றது.

அபர்டீன் ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் புத்தாக்க முயற்சிகளின் ஆதரவுடன் உருவாக்கப்பட்ட Baraka Gummies, வாடிக்கையாளர்களின் தேவைகள் மற்றும் கருத்துக்களுக்கு விசேட கவனம் செலுத்தி உருவாக்கப்பட்டுள்ளது. இயற்கையான தேனைப் பிரதான இனிப்பூட்டியாகக் கொண்டுள்ள இவற்றில், 100% இயற்கையான நிறமூட்டிகள் மற்றும் இயற்கைச் சுவைக்கு ஒத்த சுவையூட்டிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், தாவர அடிப்படையிலான ஜெல்லிங் பொருளான பெக்டின் (Pectin) சேர்க்கப்பட்டுள்ளமையால், இவை ஜெலட்டின் (Gelatine) அற்றவையாகும். மாறிவரும் நுகர்வோரின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை அடையாளம் கண்டு, சுவையையும் பயன்படுத்துவதற்கான வசதியையும் ஒருங்கிணைத்த தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதில் Aberdeen Holdings Group கொண்டுள்ள தொடர்ச்சியான கவனம், இந்தப் புதிய தயாரிப்பு வரிசையின் மூலம் சிறப்பாக வெளிப்படுகிறது.

இந்த அறிமுகம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த பயோ எக்ஸ்ட்ராக்ட்ஸ் (பிரைவேட்) லிமிடெட் (Bio Extracts (Pvt) Ltd) நிறுவனத்தின் பிரதம செயற்பாட்டு அதிகாரி இஹ்ஷான் அப்தீன் (Ihshan Abdeen), “ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான நுகர்வோர் எதிர்பார்ப்புகள் தொடர்ந்து மாற்றமடைந்து வருகின்றன. அந்த மாற்றங்களுக்கு அர்த்தமுள்ள வகையில் பதிலளிப்பதே புத்தாக்கமாகும். பரிச்சயமான ஆரோக்கிய நலன் சார்ந்த மூலப்பொருட்களைக் கொண்டு, அன்றாட வாழ்வில் இலகுவாகவும் மகிழ்ச்சியாகவும் இணைத்துக்கொள்ளக்கூடிய வடிவமொன்றை பரக்கா கம்மீஸ் மூலம் நாம் உருவாக்கியுள்ளோம். இது பரக்காவின் பயணத்தில் ஒரு முக்கிய முன்னேற்றப் படியாகும். அத்துடன், அபர்டீன் ஹோல்டிங்ஸில் நாம் தொடர்ந்து கட்டியெழுப்பி வரும் புத்தாக்கச் சிந்தனையையும் இது பிரதிபலிக்கின்றது” என்று தெரிவித்தார்.

நாடளாவிய ரீதியிலுள்ள குளோமார்க் (GLOMARK) பல்பொருள் அங்காடிகளிலும் இணையவழியாகவும் தற்போது கொள்வனவு செய்யக்கூடிய பரக்கா கம்மீஸ், தனது ஆரோக்கிய உற்பத்தித் தொகுப்பைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வரும் பரக்கா வர்த்தகநாமத்தின் புதிய அத்தியாயத்தைக் குறிக்கின்றது. நம்பகமான மூலப்பொருட்களை வசதி, சுவை மற்றும் நவீன நுகர்வோரின் தேவைகளுடன் ஒன்றிணைக்கும் இந்த அறிமுகம், ஒரு புதிய உற்பத்தி வரிசை என்பதற்கு அப்பால், அன்றாட ஆரோக்கியம் தொடர்பான புதிய அணுகுமுறையொன்றையும் பிரதிபலிக்கின்றது.

banner

You may also like

Leave a Comment