Home Insuranceசுயாதீன பசுமை இல்ல வாயு சரிபார்த்தலில் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் உறுதிப்பாடு

சுயாதீன பசுமை இல்ல வாயு சரிபார்த்தலில் ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல் லிமிடெட் நிறுவனம் உறுதிப்பாடு

by CeylonBusiness1
October 22, 2026 5:00 pm/**/ 0 comment

சுற்றாடல் அமைச்சின் கீழ் இயங்கும் இலங்கை காலநிலை நிதியம் (தனியார்) கம்பனி நிறுவனத்திடமிருந்து பசுமை இல்ல வாயு சரிபார்த்தலுக்கான மதிப்பீடு உறுதிப்படுத்தலை ஸ்ரீலங்கா இன்ஷூரன்ஸ் கோப்பரேஷன் ஜெனரல்  லிமிடெட் (SLICGL) நிறுவனத்தின் உத்தியோகபூர்வமாகப் பெற்றுக்கொண்டது.  இதன் மூலம் நிறுவனத்தின் பச்சை இல்ல வாயு நிலைமை ISO 14064-1:2018 தரநிலைக்கு இணங்குவதுடன், ISO 14064-3:2019 தரநிலைக்கு அமைவாக சரிபார்க்கப்படுகின்றது என்பது மீண்டும் உறுதிப்படுது்தப்படுகிறது.

சுற்றுச்சூழல், பொருளாதாரம் மற்றும் சேவையாற்றும் சமூகங்களில் சாதகமான மாற்றத்தை ஏற்படுத்துவதில் SLICGL நிறுவனம் தொடர்ச்சியான உறுதிப்பாட்டுடன் உள்ளது என்பதையும், சொந்த சுற்றாடல் தாக்கத்தை அளவிடுவதிலும் அறிக்கையிடுவதிலும் நிலைபேறான நடைமுறைகளை ஒருங்கிணைத்துள்ளது என்பதற்கும் இந்த அங்கீகாரம் எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. SLICGL நிறுவனம் இதற்கு முன்னரும் இந்தச் சரிபார்ப்பு மதிப்பீட்டைப் பெற்றிருப்பதுடன், இது விடயத்தில் தொடர்ந்தும் தரநிலைகள் பேணப்படுகின்றன என்பதை இவ்வருடத்தில் பெற்ற அங்கீகாரம் மீளவும் உறுதிப்படுத்தியுள்ளது.

தலைமை அலுவலகம் மற்றும் கிளை வலையமைப்பு உள்ளிட்ட SLICGL நிறுவனத்தின் செயற்பாடுகளை இந்தச் சரிபார்ப்பு மதிப்பீடு செய்துள்ளது. இந்த மதிப்பீட்டின் போது புகைவெளியேற்ற மூலங்களை அடையாளம் காண்பதற்கும், புகைவெளியேற்றத்தைக் குறைத்தல் மற்றும் அது தொடர்பான செயற்பாடுகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலக்காகக் கொள்வதற்கும் மின்சக்தி நுகர்வு, வாகனப் பயன்பாடு மற்றும் ஏனைய வணிகச் செயற்பாடுகளும் பலிசீலிக்கப்பட்டன.

இந்த மதிப்பீடு சுயாதீனமான, அங்கீகாரம் பெற்ற மூன்றாம் தரப்பினரான இலங்கை காலநிலை நிதியம் (தனியார்) கம்பனி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மதிப்பீட்டு முடிவுகள் பாரபட்சமற்றதாகவும் துல்லியமானதாகவும் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. SLICGL நிறுவனத்தைப் பொறுத்த வரையில், இந்த மதிப்பீடு மற்றும் அறிக்கையிடல் செயன்முறையை ஒருமுறை மேற்கொள்ளப்படும் நடவடிக்கையாகக் கருதாமல், தொடர்ச்சியான பொறுப்பாகக் கருதுவதே நிலைபேறான அர்ப்பணிப்பின் முக்கிய அம்சமாகும்.

banner

இலங்கையின் முன்னணி அரசுக்குச் சொந்தமான பொது காப்புறுதி நிறுவனமாகவும், சந்தைப் பங்கின் அடிப்படையில் நாட்டின் முன்னணி மோட்டார் காப்புறுதி நிறுவனமாகவும் விளங்கும் SLICGL நிறுவனம், சுற்றாடல் முகாமைத்துவம், வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றுக்கான சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தரநிலைகளுக்கு ஏற்ப தனது செயற்பாடுகளைத் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது.

2025 ஜனவரி 01 முதல் டிசம்பர் 31 வரை மேற்கொள்ளப்பட்ட மதிப்பீட்டுக் காலப்பகுதியை உள்ளடக்கிய இந்தச் சரிபார்ப்பில், SLICGL நிறுவனத்தின் செயற்பாட்டு கட்டுப்பாட்டின் கீழ் உள்ள வணிக நடவடிக்கைகள் மதிப்பீடு செய்யப்பட்டதுடன், மொத்த பசுமைக்குடில் வாயு உமிழ்வு 3,454.59 தொன் CO₂ சமமான அளவு என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில், 1,626.10 தொன் நேரடி உமிழ்வுகள் (Scope 1) ஆகவும், 1,828.48 தொன் மறைமுக உமிழ்வுகளாகவும் பதிவாகியுள்ளன. மறைமுக உமிழ்வுகளில், மின்சாரப் பயன்பாட்டிலிருந்து ஏற்பட்ட 1,342.82 தொன் (Scope 2) மற்றும் ஏனைய மறைமுக மூலங்களிலிருந்து ஏற்பட்ட 485.66 தொன் (Scope 3) உமிழ்வுகள் அடங்குகின்றன.

இலங்கை ஒத்தியல்பு மதிப்பீட்டிற்கான அங்கீகார சபையினால் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுடன்,  சர்வதேச அங்கீகார மன்றத்தின் (International Accreditation Forum – IAF) பல்தரப்பு அங்கீகார ஏற்பாட்டின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்தச் சரிபார்ப்பு மதிப்பீடு 2027 மார்ச் 31 வரை செல்லுபடியாகும்.

 

You may also like

Leave a Comment