மலிபன் நிறுவனம் நோக்கத்துடன் முன்னெடுத்த HumaniTill: A Lived Experience of Giving என்ற பிரச்சாரமானது, Dragons of Asia 2026 நிகழ்வில் நிகழ்வு அல்லது அனுபவப் பிரிவின் கீழ் வெண்கல Dragon விருதைப் பெற்றுள்ளது. இது, கருணை, தாராள மனப்பான்மை மற்றும் மக்களுக்கு வாழ்வில் இரண்டாவது வாய்ப்பை வழங்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்ட ஒரு இலங்கைச் சிந்தனைக்குக் கிடைத்த மற்றுமொரு சர்வதேச அங்கீகாரமாகும்.
இந்த அங்கீகாரம், ஆசியாவின் உயர்மட்ட, பெறுபேறுகளை மையமாகக் கொண்ட சந்தைப்படுத்தல் தகவல் தொடர்பாடல் அங்கீகாரத் திட்டமான Dragons of Asia நிகழ்வால் அங்கீகரிக்கப்பட்ட படைப்புகளில் HumaniTill முயற்சியையும் இடம்பெறச் செய்துள்ளது. இத்திட்டம், கடந்த 26 ஆண்டுகளாக இப்பிராந்தியம் முழுவதும் சந்தைப்படுத்தல் சிறப்பை அங்கீகரித்து வருகிறது. வலுவான சிந்தனைகள், திறமையான தகவல் தொடர்பாடல் மற்றும் அர்த்தமுள்ள விளைவு ஆகியவற்றை வெளிப்படுத்தும் படைப்புகளை இத்திட்டம் கொண்டாடுகிறது. எனவே, இந்த அளவிலான அங்கீகாரம் இலங்கை வர்த்தகநாமங்களைப் பொறுத்தவரை குறிப்பிடத்தக்கதொரு சாதனையாகும்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றுத்திறனாளிகளுக்குத் தனிப்பயனாக்கப்பட்ட செயற்கை அவயவங்களை வழங்கி ஆதரவளித்து வரும் Meththa அறக்கட்டளை என்ற மனிதாபிமான அமைப்புடன் இணைந்து, மலிபன் ஜீவிதாலோக திட்டத்தின் (Maliban Jeewithaloka Programme) கீழ் HumaniTill உருவாக்கப்பட்டது. பெரும் நிதி நெருக்கடிகளை எதிர்கொள்ளும் தனிநபர்கள், தங்கள் நடமாடும் திறன், சுதந்திரம் மற்றும் தன்னம்பிக்கையை மீண்டும் பெற உதவுவதற்காக இந்த முயற்சி உருவாக்கப்பட்டது. இந்த பிரச்சாரம் TBWA\Sri Lanka நிறுவனத்துடன் இணைந்து உருவாக்கப்பட்டது. அவர்களின் ஆக்கபூர்வமான படைப்பாக்கப் பங்களிப்பு, இந்த சிந்தனையையும் அதன் நோக்கத்தையும் உயிர்ப்பிக்க உதவியது.

இந்தப் பிரச்சாரத்தின் மையமாக அமைந்த HumaniTill, ஒளிபுகும் கை மற்றும் காலைக் கொண்ட, மனித உருவ அளவிலான ஒரு உருவமாகும். ஒரு சாதாரண நன்கொடைப் பெட்டியை விட மேலாக வடிவமைக்கப்பட்ட இது, விபத்துகள் அல்லது நோய்களால் தங்கள் அவயவங்களை இழந்தவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தியதுடன், கொடுக்கும் எளிய செயலை ஒருவரின் வாழ்க்கையை மாற்றுவதற்கான ஒரு உறுதியான வாய்ப்பாக உருமாற்றியது.
தேவைப்படுபவர்களுக்கு செயற்கை அவயவங்களை வழங்குவதற்குப் பங்களிக்குமாறு இந்த முயற்சி மக்களை ஊக்குவித்ததுடன், தனிநபர்களின் தாராள மனப்பான்மையை, நடமாடும் திறனை மீட்டெடுப்பதற்கும் வாழ்க்கையில் ஒரு இரண்டாவது வாய்ப்பை வழங்குவதற்கும் ஆன ஒரு கூட்டு முயற்சியாக மாற்றியது. அதன் தனித்துவமான பௌதீக அனுபவத்தின் மூலம், HumaniTill விடுக்கும் செய்தியை, பங்கேற்பை ஊக்குவிக்கும் வகையிலும், அந்த நோக்கத்துடன் ஒரு உணர்வுபூர்வமான தொடர்பை உருவாக்கும் வகையிலும் உயிர்ப்பித்தது.
Dragons of Sri Lanka 2026 நிகழ்வில், நிகழ்வு அல்லது அனுபவப் பிரிவில் வெள்ளி Dragon விருதையும், நோக்கம், சுற்றுச்சூழல் அல்லது நிலைபேற்றியல் பிரிவில் வெண்கல Dragon விருதையும், அத்துடன் MAD STARS 2026 நிகழ்வில் வர்த்தகநாம அனுபவம் மற்றும் செயல்பாட்டு நட்சத்திரங்கள், கலாச்சாரம் மற்றும் சூழல் பிரிவில் Crystal விருதையும் பெற்றதைத் தொடர்ந்து, இந்த வெண்கல Dragon அங்கீகாரம், இந்தப் பிரச்சாரத்தின் வளர்ந்து வரும் சர்வதேச வெற்றிக்கு மேலும் வலுச் சேர்க்கிறது. இந்த அங்கீகாரங்கள் அனைத்தும், நோக்கமும், படைப்பாற்றலும், மனித தாக்கமும் எனப் பல கட்ட அங்கீகாரங்களில் ஒன்றிணைந்த ஒரு இலங்கைச் சிந்தனையின் வலிமையை எடுத்துக்காட்டுகின்றன.
இந்த அங்கீகாரம் குறித்து கருத்து தெரிவித்த மலிபன் நிறுவனங்கள் குழுமத்தின் நிறுவனத் தகவல் தொடர்பாடல் துறைத் தலைமை அதிகாரி போசித பெரேரா, “வாழ்வில் ஒவ்வொருவருக்கும் இரண்டாவது வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்ற எளிய நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டு HumaniTill உருவாக்கப்பட்டது. Meththa அறக்கட்டளையுடன் இணைந்து பணியாற்றி, கொடுக்கும் செயலை மக்கள் பார்க்கவும், புரிந்துகொள்ளவும், அதில் பங்கேற்கவும் கூடிய ஒன்றாக மாற்ற விரும்பினோம். Dragons of Asia நிகழ்வில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், அந்தச் சிந்தனைக்கும், அதைவிட முக்கியமாக, அதன் பின்னணியில் உள்ள நோக்கத்திற்கும் கிடைத்த ஒரு அர்த்தமுள்ள அங்கீகாரமாகும். இந்த நம்பிக்கையின் செய்தியை உயிர்ப்பிக்க உதவிய அனைவருக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்,” என்று கூறினார்.
இலங்கையின் மிகவும் நம்பகமான வீட்டுப் பயன்பாட்டுப் பொருட்களில் ஒன்றாகத் திகழும் தனது பங்கிற்கு அப்பாற்பட்டு, நன்மையை ஊக்குவிக்கவும் அர்த்தமுள்ள விளைவை ஏற்படுத்தவும் தனது தளங்களைப் பயன்படுத்துவதில் மலிபனின் அர்ப்பணிப்பை இந்த அங்கீகாரம் மேலும் வலுப்படுத்துகிறது.
HumaniTill மூலம், கருணையில் வேரூன்றிய ஒரு எளிய சிந்தனை இலங்கையிலிருந்து பிராந்திய படைப்பாற்றல் தளத்திற்குப் பயணித்துள்ளது. இது, நோக்கமுள்ள படைப்பாற்றல் எவ்வாறு செயலைத் தூண்டி, மற்றவர்களுக்கு வாழ்க்கையில் இரண்டாவது வாய்ப்பை வழங்க உதவும் என்பதை நிரூபிக்கிறது.
