70 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பாரம்பரியச் சிறப்புடன், இலங்கையில் குடும்பங்கள் மத்தியில் மிகவும் நம்பிக்கைக்குரிய வர்த்தகநாமங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்ற மலிபன் பிஸ்கட்ஸ் நிறுவனம், 85 கிலோ எடைக்கு உட்பட்ட வீரர்களைக் கொண்ட நியூசிலாந்து ரக்பி அணியின் இலங்கைச் சுற்றுப்பயணம் 2026 க்கு பிரதான அனுசரணையை வழங்க முன்வந்துள்ளது. உள்ளூரில் மிகவும் பிரபலமான இவ்விளையாட்டை வளர்ச்சி பெறச் செய்து, அபிவிருத்தி செய்வதில் தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
இலங்கைக்கு வருகை தருகின்ற 85 கிலோ எடைக்கு உட்பட்ட வீரர்களைக் கொண்ட நியூசிலாந்து ரக்பி அணியின் சுற்றுப்பயணத்திற்கு இம்முறை தொடர்ச்சியாக இரண்டாவது தடவையாகவும் தற்போது இந்த அனுசரணை வழங்கப்படுகின்றது. இலங்கையில் ரக்பி விளையாட்டுத் துறையில் இளம் வீரர்களுக்கு உத்வேகமளித்து, அர்த்தமுள்ள வாய்ப்புக்களைத் தோற்றுவிப்பதில் விளையாட்டு நிகழ்வுகளுக்கு இவ்வர்த்தகநாமம் மிக நீண்ட காலமாக முதலீடு செய்து வருவதை இது பிரதிபலிக்கின்றது.
உத்வேகமளிக்கும் நலச்செழுமை (Inspiring Goodness) என்ற தனது நீடித்த நோக்கத்தின் வழிகாட்டலுடன், மலிபன் நிறுவனம் இச்சுற்றுப்பயணத்திற்கு ஆதரவளிக்க முன்வந்துள்ளமை நாடெங்கிலும் ரக்பி விளையாட்டில் இளைஞர்கள் பங்குபற்ற முன்வருவதை ஊக்குவித்து, சர்வதேச அனுபவத்திற்கான வழிமுறைகளைத் தோற்றுவித்து, போட்டித்திறன் தராதரங்களை மேம்படுத்தி, உள்ளூர் விளையாட்டை வலுப்படுத்தும் பரந்த அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றது.
இலங்கையில் ரக்பி விளையாட்டுக்கு மலிபன் நிறுவனம் வழங்கி வருகின்ற பங்களிப்பு என்பது இச்சுற்றுப்பயணத்துக்கு அது வழங்கும் அனுசரணைக்கும் அப்பாற்பட்டு, மிக நீண்டுள்ளது. பிராந்திய மட்டத்தில் தேசிய அணிக்கு ஆதரவளித்து, ஆசிய ரக்பி தகுதிகாண் சுற்றுப்போட்டிகளில் இலங்கை ரக்பி அணிக்கான பிளாட்டினம் அனுசரணையாளராக இவ்வர்த்தகநாமம் இணைந்து கொண்டது. கழகங்களுக்கு இடையிலான மலிபன் ரக்பி சுற்றுப்போட்டி மற்றும் மலிபன் கிளிஃபேர்ட் கிண்ண நொக்அவுட் சுற்றுப்போட்டி 2025/2026 என நாட்டில் இடம்பெறும் மிகவும் முக்கிய இரண்டு ரக்பி போட்டிகளுக்கு பிரதான அனுசரணையை மலிபன் வழங்கியிருந்தது. இந்த அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இலங்கையில் மிகவும் அங்கீகாரம் பெற்ற ரக்பி அமைப்புக்களில் ஒன்றான கண்டி விளையாட்டுக் கழகத்துடன் இவ்வர்த்தகநாமம் கைகோர்த்துள்ளது.
இலங்கையில் அடுத்த தலைமுறை ரக்பி வீரர்களை வளர்க்கும் நோக்குடன் இலங்கையின் 20 வயதிற்குட்பட்ட ஆடவர் மற்றும் மகளிர் ரக்பி அணிகளுக்கு ஆதரவளித்து, வளர்ந்து வரும் திறமைசாலிகள் சர்வதேசரீதியாக போட்டியிடுவதற்கு மகத்தான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்து தனது அர்ப்பணிப்பை மலிபன் தொடர்ந்தும் சிறப்பாக முன்னெடுத்துள்ளது. இதை விட, இலங்கை ரக்பி சங்கத்தின் ஒரு ஆண்டு கால நடுவர் மேம்பாட்டுத் திட்டத்திற்கு அது ஆதரவளிக்க முன்வந்துள்ளதுடன், இவ்விளையாட்டின் சிறப்புப் பண்புகளான நியாயபூர்வம், பாதுகாப்பு, மற்றும் தராதரங்கள் ஆகியவற்றை வலுப்படுத்த உதவுகின்றது.
நிறுவன தொடர்பாடல்களுக்கான குழுத் தலைவரான போஷித பெரேரா அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக, நாம் தொழிற்படும் சமூகங்கள் மத்தியில் நலச்செழுமைக்கு உத்வேகம் அளிப்பதில் மலிபன் தொடர்ந்தும் அர்ப்பணிப்புடன் உழைத்து வந்துள்ளது. இலங்கையின் விளையாட்டுத் துறையின் எதிர்காலத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதிலும் அதன் அர்ப்பணிப்பு தொடர்கின்றது. பண்புகளை வளர்த்து, சமூகங்களுக்கு வலுவூட்டி, தன்னம்பிக்கையுடனும், நோக்கத்துடனும் இளம் தலைமுறையினர் வளர்ச்சி காண்பதற்கான புதிய வழிமுறைகளைத் திறப்பதற்கான வலிமை ரக்பிக்கு உண்டு என்ற எமது நம்பிக்கையின் பிரதிபலிப்பே 85 கிலோ எடைக்கு உட்பட்ட வீரர்களைக் கொண்ட நியூசிலாந்து ரக்பி அணியின் சுற்றுப்பயணத்திற்கு எமது தொடர்ச்சியான ஆதரவாகும். இதைப் போன்ற நிகழ்வுகளுக்கு ஆதரவு வழங்குவதனூடாக, உள்ளூரில் இவ்விளையாட்டின் தராதரத்தை மேம்படுத்துவதற்குப் பங்களித்து, வளரத்துடிக்கின்ற வீரர்களுக்கு வாய்ப்புக்களை விரிவுபடுத்தி, களத்திலும், களத்திற்கு வெளியிலும் ஒழுக்கம், கூட்டு உழைப்பு, மற்றும் மீள்திறன் ஆகிய பண்புகளை உள்வாங்கிக் கொள்வதற்கு அடுத்த தலைமுறைக்கு உத்வேகமளிக்க முடியுமென நாம் நம்புகின்றோம்.”
இலங்கை ரக்பி சங்கத்தின் தலைவர் பவித்ர பெர்னாண்டோ அவர்கள் இது குறித்து கருத்து தெரிவிக்கையில், “வாழ்வுகளை மேம்படுத்தி, சமூகங்களை ஐக்கியப்படுத்துகின்ற வலிமை ரக்பிக்கு உள்ளது என்ற பகிரப்பட்ட நம்பிக்கையை மலிபனின் தொடர்ச்சியான ஆதரவு பிரதிபலிக்கின்றது. இச்சுற்றுப்பயணமானது வெறுமனே ஒரு போட்டித்தொடர் என்பதற்கும் அப்பாற்பட்டது. இது எமது வீரர்களுக்கு உத்வேகமளித்து, எமது கட்டமைப்புக்களுக்கு சவால் விடுத்து, இலங்கை ரக்பி சங்கத்தை அடுத்த மட்டத்திற்குக் கொண்டு செல்வதாகும். எமது விளையாட்டின் எதிர்காலம் குறித்து உண்மையான நம்பிக்கை கொண்டுள்ள ஒரு வர்த்தகநாமத்துடன் கைகோர்ப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்.”
சர்வதேச ரக்பி அரங்கில் மற்றுமொரு விறுவிறுப்பான அத்தியாயத்தை வரவேற்பதற்கு இலங்கை தயாராகி வருகின்ற இத்தருணத்தில், மலிபன் வழங்கி வருகின்ற தொடர்ச்சியான ஆதரவு விளையாட்டின் எதிர்காலத்தின் மீது தன்னம்பிக்கையின் வலுவான வெளிப்பாடாகவுள்ளது. வீரர்கள், போட்டிகள், மற்றும் பரந்த ரக்பி கட்டமைப்பின் மீதான தனது முதலீட்டின் மூலமாக, இவ்விளையாட்டின் உத்வேகத்தை முன்கொண்டு செல்லும் பொறுப்புடன், பாரிய கனவையும், உயர்ந்த நோக்கத்தையும் கொண்ட புதிய தலைமுறையொன்றை ஊக்குவிக்க இவ்வர்த்தகநாமமம் உதவுகின்றது.
