உள்நாட்டு நிதி நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, குருநாகல் மாவட்டத்தின் நாரம்மலையில் தனது 69ஆவது கிளையை வெற்றிகரமாகத் திறந்து வைத்ததன் மூலம், வடமேல் மாகாணத்தில் தனது சேவை வலையமைப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. கொழும்பிலிருந்து 74 கிலோமீற்றர் தொலைவிலும், குருநாகல் நகரை எளிதில் சென்றடையக்கூடிய வகையிலும் நீர்கொழும்பு வீதியில் அமைந்துள்ள இப்புதிய கிளை, வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட, வாடிக்கையாளரை மையமாகக் கொண்ட நிதித் தீர்வுகளை மிகவும் சௌகரியமாகவும் விரிவாகவும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்குகிறது.சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளுக்கான வளர்ந்துவரும் நகர்ப்புற வர்த்தக மற்றும் சேவை மையமாக நாரம்மலை தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதுடன், அதனுடன் முறையான நிதிச் சேவைகளுக்கான தேவையும் அதிகரித்து வருகிறது.
சியபத பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. மதிஷ ஹேவாவித்தாரண தலைமையில் புதிய கிளை திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பிரதம செயற்பாட்டு அதிகாரி திரு. ராஜீவ் டி சில்வா, மகந்துர ஹெந்தியாகல மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த “சியபத ஷில்பாலோக்க” விருது பெற்ற செல்வி. துமாஷி நவிந்த்யா, சிரேஷ்ட முகாமைத்துவ உறுப்பினர்கள் மற்றும் பணியாளர்கள் கலந்துகொண்டனர். மேலும், நாரம்மலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி திரு. தியுடர் அபேவிக்ரம, கிராம அலுவலர் திரு. தர்மசிறி ரத்நாயக்க, வர்த்தக சங்கத் தலைவர் திரு. சாலிய விக்கிரமாராச்சி, அரச மற்றும் தனியார் வங்கிகள் மற்றும் காப்புறுதி நிறுவனங்களின் பிரதிநிதிகள், நலன் விரும்பிகள் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் உரையாற்றிய சியபத பினான்ஸ் பிஎல்சியின் பிரதம நிறைவேற்று அதிகாரி திரு. மதிஷ ஹேவாவித்தாரண தெரிவிக்கையில் , “எமது சேவை வலையமைப்பை நாரம்மலை வரை விரிவுபடுத்துவதில் நாம் பெருமகிழ்ச்சி அடைகிறோம். வர்த்தகம் மற்றும் சேவைகள், ஆடை, மரம்சார் தயாரிப்புக்கள் மற்றும் தளபாட உற்பத்தி போன்ற சிறிய அளவிலான கைத்தொழில்கள், அத்துடன் நெல் மற்றும் தேங்காய் உற்பத்தியை அடிப்படையாகக் கொண்ட வலுவான விவசாயத் துறை எனப் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளைக் கொண்ட நகரமாக நாரம்மலை திகழ்கிறது. குருநாகல் மற்றும் கொழும்புடன் கொண்டுள்ள சிறந்த போக்குவரத்து இணைப்புகளும், எமது விரிவாக்கத் திட்டத்திற்கு நாரம்மலை நகரினை தேர்வு செய்தது மிகவும் பொருத்தமாகும். நாம் சேவையாற்றும் ஒவ்வொரு சமூகத்தினரினதும் வாழ்க்கைத் தரத்தில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்துவதே எமது இலக்காகும். அந்த வகையில், இங்குள்ள குடும்பங்கள் மற்றும் வர்த்தக நிறுவனங்களின் எதிர்பார்ப்புகளுக்கும் இலட்சியங்களுக்கும் ஆதரவு வழங்கி உறுதுணையாவோம்.”என தெரிவித்தார்.
தொழில்முனைவோர், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் நிறுவனங்கள் (ளுஆநுள) மற்றும் வளர்ச்சியை இலக்காகக் கொண்ட தனிநபர்களின் மாறிவரும் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்ட விரிவான தயாரிப்புகள் மற்றும் நிதித் தீர்வுகளை நாரம்மலை கிளை வழங்குகிறது. இச்சேவைகளில் லீசிங், நிலையான வைப்புகள், தங்கக் கடன்கள், வர்த்தகக் கடன்கள், தனிநபர் கடன்கள், விரைவு வரைவு, தரகு மற்றும் நிறுவனத்தின் கட்டணப் பட்டியல் செலுத்தும் வசதியான ஸ்மார்ட் பே ஆகியவை அடங்குகின்றன.

சம்பத் வங்கி குழுமத்தின் மிகப்பெரிய முழு உரிமையுடைய துணை நிறுவனமான சியபத பினான்ஸ் பிஎல்சி, நாடு முழுவதும் 69 கிளைகளுடன், தனது வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த சேவை வழங்கல் தரங்களை உறுதி செய்கிறது. இந்நிறுவனம், அதன் உறுதியான நிதி நிலை மற்றும் நம்பிக்கைக்குரிய வளர்ச்சிப் பாதையைப் பிரதிபலிக்கும் வகையில், ஃபிட்ச் ரேட்டிங்ஸ் நிறுவனத்திடமிருந்து ‘யு(டமய)’ என்ற தேசிய நீண்ட கால மதிப்பீட்டையும், நிலையான கண்ணோட்டத்தையும் பெற்றுள்ளது. கடந்த 21 ஆண்டுகளாக, சியபத பினான்ஸ் பிஎல்சி, தீவு முழுவதும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோரின் முயற்சிகளின் வளர்ச்சிக்கும், தனிநபர்களின் நிதித் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் பங்களித்துள்ளது.

நாரம்மலை கிளையுடன் தொடர்பு கொள்ள 037-7437600 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும். அல்லது இல 103இ நீர்கொழும்பு வீதி, நாரம்மலையில்; உள்ள அலுவலகத்திற்கு வருகை தரவும். அல்லது மேலதிக தகவல்களுக்கு, றறற.ளலையியவாய.டம என்ற உத்தியோகப்பூர்வ இணையதளத்தைப் பார்வையிடவும்.
ஊடக தொடர்பு :
பெயர்: சம்பிகா தல்கொடபிட்டிய
பதவி: முகாமையாளர்; – பிராண்டிங் ரூ தொடர்பாடல்
மொபைல் இலக்கம்: 0773 856 757
மின்னஞ்சல் முகவரி: உhயஅpமையவ;ளலையியவாய.டம
