இலங்கையில் VOGE-இன் அங்கீகரிக்கப்பட்ட முகவராகத் திகழும் Yamamoto Motor Corporation நிறுவனம், பம்பலப்பிட்டியில் புதிய VOGE அனுபவ மையத்தை உத்தியோகபூர்வமாகத் திறந்துள்ளது. இது இலங்கையின் உயர்தர மோட்டார் சைக்கிள் சந்தையில் இந்த வர்த்தகநாமத்தின் விரிவாக்கத்தில் ஒரு முக்கிய சாதனை மைல்கல்லாக அமைந்துள்ளது.
வழக்கமான காட்சியறை என்ற நிலையைக் கடந்து, இந்த VOGE அனுபவ மையமானது மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களுக்கான ஒரு பிரத்தியேக அமைவிடமாக விளங்குகிறது. இங்கு அவர்கள் VOGE வழங்கும் பல்வேறு மோட்டார் சைக்கிள் தயாரிப்பு வடிவங்களைப் பார்வையிடவும், அதன் பொறியியல் கண்டுபிடிப்புகள் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பங்களை அறிந்துகொள்ளவும், VOGE-இன் அனுபவத்தை நேரடியாகப் பெறவும் முடியும். வாடிக்கையாளர்களுக்குத் தொழில்முறை வழிகாட்டுதல் மற்றும் விரிவான விற்பனைக்குப் பிந்தைய சேவைகளை ஒரே இடத்தில் வழங்கும் இந்த மையம், உரிமையாளர்களுக்கு உயர்தர அனுபவத்தை வழங்குவதில் இந்நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.
2018-இல் சர்வதேச அளவில் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, ஐரோப்பா, ஆசியா, இலத்தீன் அமெரிக்கா மற்றும் பிற சர்வதேச சந்தைகளில் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் VOGE தனது இருப்பை வெற்றிகரமாக விரிவுபடுத்தியுள்ளது. மோட்டார் சைக்கிள் உற்பத்தியில் உள்ள பரந்த நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்ப மேம்பாட்டுத் திறன்களின் பின்னணியைக் கொண்ட இந்த வர்த்தகநாமம், BMW உடனான நீண்டகால ஒத்துழைப்பின் மூலம் வலுப்படுத்தப்பட்ட பொறியியல் அறிவையும் பயன்படுத்துகிறது.

VOGE-இன் வலுவான விற்பனைச் செயல்பாடுகள் அதன் வளர்ந்து வரும் சர்வதேச இருப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றன. 2025-ஆம் ஆண்டில் உலகளவில் 106,389 மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்திருந்த நிலையில், 2026 ஜூலை இறுதிக்குள் விற்பனை எண்ணிக்கை 92,237-ஐ எட்டியுள்ளது. இது முந்தைய ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 43.2% வளர்ச்சியைக் காட்டுகிறது.
புதிய அனுபவ மையத்தின் முக்கிய சிறப்பம்சங்களில் ஒன்றான VOGE R 125 S, பந்தய மோட்டார் சைக்கிள்களையொத்த வடிவமைப்பு, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் அன்றாடப் பயன்பாட்டு வசதி ஆகியவற்றை ஒன்றிணைக்கும் ஒரு மோட்டார் சைக்கிள் ஆகும். 124.8cc ஒற்றை-சிலிண்டர், நான்கு-வால்வு, liquid-cooled இன்ஜின், six-speed கியர்பொக்ஸ் மற்றும் electronic fuel injection ஆகியவற்றைக் கொண்டுள்ள இந்த R 125 S, செயல்திறன் மற்றும் ஓட்டும் வசதியின் கலப்பு நன்மையை வழங்குகிறது. இதன் அம்சங்களில் 7-அங்குல கலர் LED instrument display, முழுமையான LED lighting, முன்பக்க கேமரா, dual-channel ABS; உடன் கூடிய disc பிரேக்குகள், தலைகீழ் முன்பக்க suspension மற்றும் பின்பக்க single-shock சிஸ்டம் ஆகியவை அடங்கும்.
இதனைத் திறந்து வைத்துள்ளமை குறித்து கருத்து தெரிவித்த Yamamoto Motor Corporation நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி ரஜீவ் சந்திரகுமார், “VOGE அனுபவ மையத்தின் தொடக்கமானது, சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட மோட்டார் சைக்கிள் வர்த்தகநாமங்களையும், உரிமையாளர்களுக்கு உண்மையான உயர்தர அனுபவத்தையும் இலங்கையிலுள்ள ஓட்டுனர்களுக்குக் கொண்டு வருவதற்கான எங்கள் உறுதிப்பாட்டில் ஒரு முக்கிய சாதனை மைல்கல்லைக் குறிக்கிறது. VOGE அதன் சமகால வடிவமைப்பு, பொறியியல் சிறப்பு மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்திற்காக தனித்துவமாகத் திகழ்கிறது. இந்த பிரத்தியேக மையத்தின் மூலம், ஒரு உயர்தர மோட்டார் சைக்கிள் வர்த்தகநாமத்திடமிருந்து வாடிக்கையாளர்கள் எதிர்பார்க்கும் தொழில்முறை சேவை, நம்பகத்தன்மை மற்றும் நம்பிக்கையின் ஆதரவுடன், இந்த சிறப்புப் பண்புகளை நேரடியாக அனுபவிக்கும் வாய்ப்பை அவர்களுக்கு வழங்குவதை நாங்கள் எமது நோக்கமாகக் கொண்டுள்ளோம்” என்று கூறினார்.
VOGE அனுபவ மையத்தைத் திறந்து வைத்துள்ளமை, இலங்கையில் உள்ள மோட்டார் சைக்கிள் ஆர்வலர்களுக்கு ஒரு பிரத்தியேக அமைவிடத்தை அறிமுகப்படுத்துகிறது, மேலும் அந்த வர்த்தகநாமத்துடனும் அதன் தயாரிப்புகளுடனும் இன்னும் நெருக்கமாக ஈடுபடுவதற்கான வாய்ப்பை வழங்குகிறது. இந்த முதலீடு, நம்பகமான விற்பனைக்குப் பிந்தைய சேவை மற்றும் நீண்டகால வாடிக்கையாளர் ஆதரவுடன், உயர்தர சர்வதேச மோட்டார் சைக்கிள்களை உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்துவதற்கான Yamamoto Motor Corporation நிறுவனத்தின் உறுதிப்பாட்டை மேலும் வலுப்படுத்துகிறது.
Yamamoto Motor Corporation நிறுவனம்
இலங்கையில் VOGE-இன் அங்கீகரிக்கப்பட்ட முகவர்
ஆர்வத்தால் இயக்கப்படுகிறது. தொழில்நுட்பத்தால் செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. (Driven by Passion. Perfected by Technology.)
