Home Awards & Recognitionsதெற்காசிய பயண விருது 2026 இல் தங்கப் பதக்கம் வென்ற சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA ஹோட்டல்

தெற்காசிய பயண விருது 2026 இல் தங்கப் பதக்கம் வென்ற சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் NÜWA ஹோட்டல்

by CeylonBusiness1
October 19, 2026 12:11 pm/**/ 0 comment

இலங்கையின் முன்னணி ஆடம்பர விடுதிகளில் ஒன்றான ‘சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா‘ ஒருங்கிணைந்த ஓய்வு உல்லாச விடுதி வளாகத்தின் ‘நுவா‘ (NÜWA) ஆடம்பர ஹோட்டல், தெற்காசிய பயண விருதுகள் (SATA) 2026 நிகழ்வில், ‘தெற்காசியாவின் முன்னணி வடிவமைப்பு ஹோட்டல்‘ (South Asia’s Leading Designer Hotel) பிரிவில் தங்க விருதை வென்று சாதனை படைத்துள்ளது. தனது செயல்பாடுகளைத் தொடங்கிய முதல் ஆண்டிலேயே நவீன சொகுசு வடிவமைப்பு, கலைநயமிக்க உட்கட்டமைப்பு மற்றும் தனித்துவமிக்க விருந்தோம்பல் சேவை ஆகியவற்றிற்காக இந்த உயரிய பிராந்திய விருது நுவா ஹோட்டலுக்கு கிடைத்துள்ளமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

தெற்காசியாவின் முதல் முழுமையான ஒருங்கிணைந்த உல்லாச விடுதியான சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா மற்றும் அதன் நுவா ஹோட்டலுக்கு இந்த விருது ஒரு முக்கிய மைல்கல்லாகும். சர்வதேச ஆடம்பர பயணிகளைக் கவரும் முதன்மை மையமாக கொழும்பு நகரத்தை நிலைநிறுத்தும் முயற்சிக்கு இந்த வெற்றி மேலும் வலுசேர்த்துள்ளது.

2026 இல் தனது பத்தாவது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் தெற்காசிய பயண விருதுகள் அமைப்பு, பயணம், சுற்றுலா மற்றும் விருந்தோம்பல் துறைகளில் சிறந்து விளங்குபவர்களைக் கௌரவிக்கும் ஒரு முக்கிய பிராந்தியத் தளமாக விளங்குகிறது. தெற்காசியா முழுவதிலுமுள்ள விருந்தோம்பல் வர்த்தக நாமங்களையும் மற்றும் துறைசார் நிபுணர்களை ஒன்றிணைக்கும் இந்த விருதுகள், சிறந்த சேவை, புத்தாக்கம், விருந்தினர் அனுபவம் மற்றும் துறைசார் தலைமைத்துவம் ஆகியவற்றில் சாதித்தவர்களை பாராட்டி கௌரவிக்கிறது. SATA அமைப்பின் இந்த இந்த அங்கீகாரமானது, ஹோட்டல்கள் தங்களின் சேவைத் தரத்தைப் பிராந்திய அளவிலான பிற போட்டியாளர்களுடன் ஒப்பிட்டு மேம்படுத்திக் கொள்ளவும், சர்வதேசப் பயணிகள் மற்றும் தொழில்முறைப் பங்காளிகள் மத்தியில் தங்களது நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்திக் கொள்ளவும் சிறந்த வாய்ப்பை வழங்குகிறது.

நுவா ஹோட்டல் தனது செயல்பாடுகளைத் தொடங்கிய முதல் ஆண்டிலேயே ‘முன்னணி வடிவமைப்பு ஹோட்டல்‘ பிரிவில் தங்கம் வென்றிருப்பது, இலங்கையின் வளர்ந்து வரும் ஆடம்பர விருந்தோம்பல் துறையில் அதற்கென தனித்துவமான அடையாளத்தை உருவாக்கியுள்ளதை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, நுணுக்கமான வடிவமைப்பு, மிகச்சிறந்த சேவை மற்றும் ஒவ்வொரு சிறிய விடயத்திலும் கவனம் செலுத்துவதன் மூலம் வாடிக்கையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தை வழங்க வேண்டும் என்ற அதன் இலக்கிற்கு இந்த விருது சிறந்த சான்றாகும்.

banner

இது குறித்து சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்காவின் துணைத் தலைவரும், சொத்துப் பொது முகாமையாளருமான மைக்கல் ஹபாஷி கருத்து தெரிவிக்கையில், “நுவா ஹோட்டலின் செயல்பாடுகள் தொடங்கிய முதல் ஆண்டிலேயே தெற்காசிய பயண விருதுகளில் தங்கம் வெல்வது நுவா ஹோட்டலுக்கும், முழு சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா குழுவிற்கும் கிடைத்த மிகப்பெரிய கௌரவமாகும். இலங்கைக்கு ஒரு புதிய நவீன ஆடம்பர அனுபவத்தைக் கொண்டுவர வேண்டும் என்ற எமது இலக்கிற்கு இந்த விருது சான்றாக அமைந்துள்ளது. சமகால ஆடம்பரத்தின் தனித்துவமான வெளிப்பாட்டை இலங்கைக்குக் கொண்டுவரும் எங்கள் இலட்சியத்தை இந்த அங்கீகாரம் உறுதிப்படுத்துகிறது. அங்கு சிந்தனைமிக்க வடிவமைப்புடன் தனிப்பயனாக்கப்பட்ட சேவையும் உண்மையான விருந்தோம்பலும் இணைகின்றன. பிராந்திய விருந்தோம்பல் துறையில் நாங்கள் எங்களை நிலைநிறுத்திக்கொள்ளும் வேளையில், எங்களது விருந்தினர்களைக் கவரும் மறக்க முடியாத அனுபவங்களை வழங்குவதோடு, உலகத் தரத்திலான ஆடம்பர சுற்றுலாத் தலமாக இலங்கையை உயர்த்தவும் நாங்கள் தொடர்ந்து அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.” எனக் குறிப்பிட்டார்.

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா வளாகத்தின் அதி–ஆடம்பர அம்சங்களைக் கொண்ட ஹோட்டலான நுவா, கொழும்பு நகரின் கண்ணைக் கவரும் அழகிய காட்சிகளுடன் கூடிய நேர்த்தியான தங்குமிடங்கள், பிரத்தியேக பட்லர் சேவைகள், தனித்துவமான சமையல் கலை உணவு அனுபவங்கள் மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட விருந்தினர் சேவைகளை வழங்குகிறது. இதன் அமைவிடமானது ஆடம்பர தன்மையின் சமகால விளக்கத்தைப் பிரதிபலிக்கிறது. அங்கு தனியுரிமை, தனிப்பட்ட கவனம் மற்றும் சிந்தனைமிக்க வடிவமைப்பு ஆகியவை விருந்தினர் பயணத்தின் மையமாகத் திகழ்கின்றன.

2026 தெற்காசிய பயண விருது வழங்கும் விழாவில் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், நுவா மற்றும் சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா ஆகியன தங்களது முதல் ஆண்டிலேயே எட்டியுள்ள தொடர் சாதனைகளின் பட்டியலில் மற்றொரு மைல்கல்லாக இணைந்துள்ளது. விருந்தோம்பல் துறையின் சேவைத் தரத்தை மேலும் உயர்த்தவும், தெற்காசிய பிராந்திய ஆடம்பர சுற்றுலாச் சந்தையில் இலங்கையின் இடத்தை மேலும் வலுப்படுத்தவும் இந்த உல்லாச விடுதி கொண்டுள்ள அர்ப்பணிப்பை இச்சாதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.

சிட்டி ஆஃப் ட்ரீம்ஸ் ஸ்ரீலங்கா தனது அடுத்தகட்ட பயணத்தை நோக்கி அடியெடுத்து வைக்கும் வேளையில், இந்த அங்கீகாரமானது ஒரு சிறந்த சாதனையாக மட்டுமன்றி, வடிவமைப்பு சார்ந்த விருந்தோம்பல் துறையின் தரத்தை மேலும் உயர்த்துவதற்கும் ஒரு பெரும் உந்துதலாக அமைந்துள்ளது. விருந்தினர்களுக்கு மறக்க முடியாத அனுபவங்களை உருவாக்குவதுடன், கொழும்பு நகரின் மற்றும் அதற்கு அப்பால் உள்ள பகுதிகளின் சுற்றுலாத் துறையின் வளர்ச்சிக்கும் இது தொடர்ந்து பங்களிக்கும்.

You may also like

Leave a Comment