Home Awards & RecognitionsICC EMERGING ASIA BANKING AWARDS 2026 விருதுகள் நிகழ்வில் வளர்ச்சி மற்றும் இலாபத்தன்மைக்கான அங்கீகாரத்தை DFCC வங்கி சம்பாதித்துள்ளது

ICC EMERGING ASIA BANKING AWARDS 2026 விருதுகள் நிகழ்வில் வளர்ச்சி மற்றும் இலாபத்தன்மைக்கான அங்கீகாரத்தை DFCC வங்கி சம்பாதித்துள்ளது

by CeylonBusiness1
November 2, 2026 9:51 am/**/ 0 comment

4வது ICC Emerging Asia Banking Conclave & Awards 2026 விருதுகள் நிகழ்வில், வளர்ச்சியில் சிறந்த செயல்பாடு – இலங்கை மற்றும் இலாபத்தன்மையில் சிறந்த செயல்பாடு – இலங்கை ஆகிய இரண்டு தேசிய அளவிலான விருதுகளை DFCC வங்கி வென்றுள்ளது.

இந்திய வர்த்தக சம்மேளனத்தால் (Indian Chamber of Commerce – ICC) ஏற்பாடு செய்யப்பட்ட இந்த பிராந்திய அளவிலான விருதுகள், வளர்ந்து வரும் ஆசியச் சந்தைகளில் உள்ள நிதி நிறுவனங்களின் செயல்பாடுகளை அங்கீகரிக்கும் வகையில் வழங்கப்படுகின்றன.

இந்தியாவின் புதுடில்லியில் நடைபெற்ற விழாவில், DFCC வங்கியின் வெளிநாட்டு வங்கிச் சேவை, பணப் பரிமாற்றம் மற்றும் வணிக மேம்பாட்டுப் பிரிவின் சிரேஷ்ட துணைத் தலைவரான அன்டன் ஆறுமுகம் அவர்களிடம், இலங்கை மத்திய வங்கியின் பிரதி ஆளுநர் கே.ஜி.பீ. சிறிகுமார அவர்கள் இவ்விருதுகளை வழங்கினார்.

நிதிசார் வருவாயை மேம்படுத்தும் அதே வேளையில் தனது வணிகத்தை விரிவுபடுத்துவதற்கான DFCC வங்கியின் திறனை இவ்விரு விருதுகளும் அங்கீகரிக்கின்றன. வாடிக்கையாளர் உறவுகளை வலுப்படுத்துதல், ஐந்தொகையை கவனமாக நிர்வகித்தல் மற்றும் எதிர்காலச் செயல்பாடுகளுக்குத் தேவையான திறன்களில் முதலீடு செய்தல் ஆகியவற்றின் மூலம், வளர்ச்சி குறித்த வங்கியின் ஒழுங்குமுறை சார்ந்த அணுகுமுறையை இது பிரதிபலிக்கிறது.

banner

இந்த அங்கீகாரம் குறித்து DFCC வங்கியின் பணிப்பாளரும் மற்றும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திமால் பெரேரா அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில் கூறியதாவது:

“வணிகத்தை வலுப்படுத்தி, வாடிக்கையாளர்களுக்குச் சிறந்த சேவையை வழங்குவதற்கான திறனை உருவாக்கும்போது வளர்ச்சி முக்கியத்துவம் பெறுகிறது. எமது பணியாளர்கள், தொழில்நுட்பம் மற்றும் வாடிக்கையாளர் அனுபவம் ஆகியவற்றில் தொடர்ந்து முதலீடு செய்ய உதவுவதால் இலாபத்தன்மையும் முக்கியமானது. எனவே, இவ்விரு துறைகளிலும் அங்கீகாரம் பெறுவது குறிப்பிடத்தக்க ஒன்றாகும். வளர்ச்சி, இடர் முகாமைத்துவம் மற்றும் வாய்ப்புகளைச் சிறந்த செயல்பாடுகளாக மாற்றுதல் ஆகியவற்றில் எமது அணிகள் கடைப்பிடித்த ஒழுங்குமுறையை இது பிரதிபலிக்கிறது. அதே கவனத்துடன் அந்த முன்னேற்றத்தை மேலும் முன்னெடுத்துச் செல்வதே எமது தற்போதைய பொறுப்பாகும்.”

நிதிசார் ஒழுங்குமுறை, செயல்பாட்டு உறுதித்தன்மை மற்றும் நிலையான வருவாய் ஆகியவற்றில் தெளிவான கவனத்தைச் செலுத்தியவாறே DFCC வங்கி தனது வணிகத்தைத் தொடர்ந்து விரிவுபடுத்தி வந்த காலகட்டத்தைத் தொடர்ந்து இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

You may also like

Leave a Comment